சென்னை: விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலக காலனி காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர். விசாரணை கைதி விக்னேஷ் இறந்த அன்று இரவு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.