பெட்ரோல் டீசல் விலை உயர்வக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருவரையொருவர் பரஸ் பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காணொளி காட்சி மூலமாக பல்வேறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று அலர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம், மேகாலயா, ஜார்கண்ட், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) குறைக்கமாட்டோம் என்று அடம் பிடிப்பதாகவும், அதனால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததில் இருந்து இதுநாள்வரை, கடந்த எட்டு ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துவரும் வரி வகிதங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில்
தமிழக அரசு
பெட்ரோல் மீது 22.54 ரூபாயும், டீசல் மீது 18.45 ரூபாயும் மதிப்பு கூட்டு வரியை தற்போது விதித்துவருதாகவும், இதுவே 2014 இல் முறையே 15.67, 10.25 ரூபாயாகவு்ம் இருந்தாகவும்
நிதியமைச்சகம்
தெரிவித்துள்ளது.
அதேசமயம், எரிப்பொருட்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள போதிலும், செஸ் (cess) மற்றும் கூடுதல் கட்டண விகிதங்களை (Surcharge) அதிகரித்து வருகிறது. இதனால் தங்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்று மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசுகளும் பயன்பெறும் வகையில் cess, Surcharge களை 2014 ஆம் ஆண்டு இருந்தபடி குறைத்து, கலால் வரியை மாற்றியமைக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்போம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.