புதுடெல்லி:
டெல்லியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், அடுத்த 2 நாட்களில் டெல்லியின் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், அதிகரிக்கும் வெப்ப நிலையால் டெல்லிக்கு மஞ்சள் அலர்ட் விடப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் 1941-ம் ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதன்பிறகு தற்போது தான் இந்த அளவிற்க்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…பிரதமர் மோடி அடுத்த மாதம் ஐரோப்பியாவுக்கு பயணம்