வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பி.ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜே.எம்.பி.ஜயவர்தன வர்த்தக அமைச்சின் செயலாளராக இருப்பதுடன், பல நிறுவனங்களின் தலைவராகவும் மேலும் பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஜே.எம்.பி.ஜயவர்தனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வர்த்தக அமைச்சின் புதிய செயலாளராக நீல் பண்டார ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.