லண்டன் : பிரிட்டனில் ஆண், பெண் திருமண வயதை, 16 லிருந்து, 18 ஆக உயர்த்தும் மசோதா பார்லி.,யில் நிறைவேறியது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தற்போது, 16 மற்றும் 17 வயது ஆண்களும், பெண்களும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள அனுமதி உள்ளது.இந்நிலையில் கட்டாய திருமணம், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில், பிரிட்டன் பார்லி.,யில் பழமைவாத கட்சி எம்.பி., பாலின் லதம், திருமண வயதை உயர்த்தும் மசோதாவை தாக்கல் செய்தார். 11 மாதங்களுக்குப் பின் இந்த மசோதா நேற்று பிரிட்டன் பார்லி.,யில் நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து எலிசபெத் ராணி ஒப்புதலுடன் இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று அமலுக்கு வரும்.இதன்படி 18 வயதிற்குட்பட்ட திருமணங்கள் சட்ட மீறலாக கருதப்படும். பிரிட்டனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் திருமண வயது உயர்த்தப்படும் என, தெரிகிறது.
லண்டன் : பிரிட்டனில் ஆண், பெண் திருமண வயதை, 16 லிருந்து, 18 ஆக உயர்த்தும் மசோதா பார்லி.,யில் நிறைவேறியது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தற்போது, 16 மற்றும் 17 வயது ஆண்களும், பெண்களும் பெற்றோர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.