கராச்சி சம்பவத்தை கண்டித்துள்ள சீனா தீவிரவாதத்தின் வேர்கள் எங்கே என்று தேடிக் கண்டுபிடிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
கராச்சியில் பலூசிஸ்தானைச் சேர்ந்த பெண் தன்னை மனித வெடிகுண்டாக்கி வேன் ஒன்றை வெடிக்கச்செய்தார். இதில் 3 சீனப் பேராசிரியைகள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்
இதற்கு சீனாவின் அரசு ஊடகம் கண்டனம் தெரிவித்தது. மேலும் சீனாவைக் காயப்படுத்த நினைப்பவர்கள் தங்களுக்கு அழிவைத் தேடிக் கொள்வார்கள் என்றும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.