Happy Birthday Samantha: இளவரசியாக நடிக்க வேண்டும் என்ற கனவு எனக்கு எப்போதும் உண்டு.. சமந்தா பர்த்டே ஸ்பெஷல்

லேடி தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு இன்று 35வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு, பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் இணையம் வாயிலாக சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

சமந்தா பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறாரோ, அதே அளவு நடிப்பிலும் அசத்துகிறார். கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய நட்சத்திர நடிகர்களுடனும் பணிபுரிந்துள்ளார்.

சமந்தா ஏப்ரல் 28, 1987 அன்று சென்னையில் பிறந்தார். பல்லாவரத்தில் வளர்ந்தார். அவரது செல்லப்பெயர் யசோதா. சமந்தா’ சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் பிரிவில் பட்டக் கல்வியையும் முடித்தார்.

சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தெலுங்கு, தாய் நினெட்டி பிரபு மலையாளி. சமந்தாவுக்கு ஜொனாதன் மற்றும் டேவிட் என இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர்.

குடும்பத்தின் பொருளாதார நிலை சரியில்லாததால், பட்டப்படிப்பை முடித்தவுடன் சமந்தா மாடலிங்கில் ஈடுபட்டார்.

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் சமந்தா’ தமிழில் அறிமுகமானார். பிறகு, 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘யே மாய சேசவே’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதில், நாக சைதன்யா இவருக்கு ஜோடியாக நடித்தார்.

2012 ஆம் ஆண்டில், சமந்தா வயிறு தொடர்பான நோயால் நீண்ட காலம் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது, இதனால் பல படங்கள் அவரது கையை விட்டு சென்றன. அதே ஆண்டு, சமந்தா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக அமைப்பை மாற்றினார்.

தொடர்ந்து அவர் நடித்த நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்கள் சமந்தாவுக்கு நல்ல பெயரைத் தேடி தந்தது. அதன் பிறகு சமந்தா புகழின் உச்சத்துக்கு சென்றார். இன்று சமந்தா ஒரு படத்துக்கு 2 முதல் 3 கோடி வரை வாங்குகிறார்.

சமந்தா ‘பிரத்யுஷா ஸ்போர்ட்’ என்ற அறக்கட்டளை நிறுவி அதன் மூலம், ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குகிறார்.

திருமணத்திற்கு முன், சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் நெருங்கி பழகினர். ஆனால், அந்த உறவு நீடிக்கவில்லை. பிறகு, சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலித்து’ 6 அக்டோபர் 2017 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் தென் திரையுலகின் அனைத்து பெரிய சூப்பர் ஸ்டார்களும் கலந்து கொண்டனர். ஆனால் இதுவும் ரொம்ப காலம் நீட்டிக்கவில்லை.

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக இருந்த சமந்தாவும், நாக சைதன்யாவும் ’2 அக்டோபர் 2021 அன்று, விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த செய்தி இணையத்தில் புயலைக் கிளப்பியது. அப்போது சமந்தா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. மேலும் ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தாவின் சர்ச்சையான ராஜி கதாபாத்திரத்துக்கு தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது.

விவகாரத்து அறிவிப்புக்கு பிறகு, சமந்தா அல்லு அர்ஜுன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘புஷ்பாவில்’ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு  நடனம் ஆடினார். அதில், சமந்தாவின் நடன அசைவுகள் மற்றும் அவரது வசீகரம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த பாடல் இன்னும் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளது.

தொடர்ந்து விக்னேஷ் சிவனின் ”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்தனர். இப்படம் சமந்தாவின் பிறந்தநாளான இன்று (ஏப். 28) வெளியாகிறது.

மேலும் சமந்தா’ சகுந்தலம் எனும் தெலுங்கு படத்தில் சகுந்தலாவாக நடிக்கிறார். இந்த படம் பிரம்மாண்டமாக தயாராகிறது.

இப்படம் பற்றி சமந்தா கூறுகையில், இளவரசியாக நடிக்க வேண்டும் என்ற கனவு எனக்கு எப்போதும் உண்டு. “திரையுலகில் வந்து 10 வருடங்கள் ஆன நிலையில், என்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சகுந்தலம் வெளியீட்டு விழாவில் சமந்தா கூறியிருந்தார்.

சகுந்தலம், ஒரு பான்-இந்திய திரைப்படம், குணசேகர் இயக்கி எழுதியுள்ளார். குணசேகரின் மகள் நீலிமா குணா தயாரிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.