இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சிக்குப் பெரு தடையாக இருக்கும் அதிகப்படியான பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி மாநில அரசுகளைக் கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வில் எரிபொருள் விலை மீதான வாட் வரியை குறைக்குமாறு மாநிலங்களை வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மையில் ஒரு லிட்டர் பெட்ரோல்-க்கு எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது..? எந்த மாநிலம் எவ்வளவு வரி வசூலிக்கிறது..?
கவனிக்க வேண்டிய ஹெச்யுஎல், பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி.. ஏற்றத்தில் சென்செக்ஸ்..!
இந்தியன் ஆயில்
இந்தியன் ஆயில் தரவுகள் படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 56.32 ரூபாய், சரக்கு போக்குவரத்துக் கட்டணமாக லிட்டருக்கு 0.20 ரூபாய் விதிக்கப்படுகிறது.
இதன் மூலம் டீலர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலை 56.52 ரூபாய்க்கு விற்கிறது. இதன் பின்பு தான் மத்திய மாநில அரசுகளின் வரி விதிக்கப்படுகிறது.
டெல்லியில் 45.03 ரூபாய் வரி
இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 105.41 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியை பொருத்த வரையில் ஒரு லிட்டருக்கு 45.03 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் போக்குவரத்துத் தொலைவு மற்றும் மாநில அரசுகளின் மாற்றுப்பட்ட வரி விதிப்பு மூலம் மாறுபடும்.
தமிழ்நாடு
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 48.6 ரூபாய் வரியை மக்கள் செலுத்துகின்றனர். இந்த 48.6 ரூபாய் என்பது மத்திய மாநில அரசு விதிக்கும் வரி மட்டுமே, இதில் டீலர் கமிஷன், போக்குவரத்துக் கட்டணம் ஆகியவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 3 மாநிலங்கள்
இதுவே மகாராஷ்டிராவில் 52.5 ரூபாய், ஆந்திரப் பிரதேசத்தில் 52.4 ரூபாய், தெலுங்கானாவில் 51.6 ரூபாய் விதிக்கப்பட்டு இந்தியாவில் பெட்ரோலுக்கு அதிகம் வரி வசூலிக்கும் டாப் 3 மாநிலங்களாக உள்ளது.
பிற மாநிலங்கள்
கர்நாடகாவில் 48.1 ரூபாய், கேரளாவில் 50.2 ரூபாய், புதுச்சேரியில் 42.9 ரூபாய், குஜராத்தில் 44.5 ரூபாய், உத்தரப் பிரதேசத்தில் 45.2 ரூபாய், ஜம்மு காஷ்மீரில் 45.9 ரூபாய், பஞ்சாபில் 44.6 ரூபாய், மேற்கு வங்காளத்தில் 48.7 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது.
How much tax we pay for Petrol in each state of India..? Check the top 3 states
How much tax we pay for Petrol in each states of india..? Check top 3 states ஒரு லிட்டர் பெட்ரோல்-க்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா.. அதிகம் வரி வசூலிக்கும் மாநிலங்கள் எது?!