திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி சிறையில் இறந்ததாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். கைதி தங்கமணி மரணம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சாராயம் விற்ற தட்டரணையை சேர்ந்த தங்கமணியை 26ம் தேதி விசாரணைக்கு பின் போலீசார் சிறையில் அடைத்தனர். சிறையில் வலிப்பு வந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழந்தார்.