அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்கிறார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பைடனின் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கான பயணம் வரும் மே 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தோ- பசிபிக் பகுதிக்கான பைடன்- ஹாரிஸ் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும். எங்கள் முக்கிய பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள், பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் நடைமுறை முடிவுகளை வழங்க எங்கள் நெருக்கமான ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள்.
டோக்கியோவில் அதிபர் பைடன் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்காவின் குவாட் குழுவின் தலைவர்களையும் சந்திப்பார். இந்தப் பயணத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் பைடன் தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
டுவிட்டரை அடுத்து கோகோ கோலா, மெக்டொனால்ட்..! எலான் மஸ்க்கின் அதிரடி பதிவுகள்!!