சென்னை:
சென்னையில் தங்கம் விலை கடந்த 10 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 19ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,200க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை குறையத் தொடங்கி ரூ.40 ஆயிரத்துக்கு கீழே வந்தது.
கடந்த 20ந்தேதி ஒரு பவுன் ரூ.39,704க்கு விற்பனையானது. 21ந்தேதி ரூ.39,568 ஆக குறைந்தது. 23ந்தேதி அது ரூ.39,560 ஆனது. 25ந்தேதி தங்கம் விலை மீண்டும் குறைந்து ரூ.39,296க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.39,096க்கு விற்றது.
நேற்று தங்கம் விலை ரூ.39 ஆயிரத்துக்கு கீழே குறைந்து ரூ.38,896க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,696க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,862க்கு விற்கப்பட்டது.
இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,837க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,504 குறைந்துள்ளது.