சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான அதிமுக செயலர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாக ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களில் பல்வேறு கட்டங்களில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது கட்டமாக கடந்த 21,25-ம் தேதிகளில் மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில், போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.
மாவட்டச் செயலர்கள்: தேனி-எஸ்.பி.எம்.சையதுகான், வடசென்னை வடக்கு (கிழக்கு) – ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு (தெற்கு)- டி.ஜி.வெங்கடேஷ்பாபு, வடசென்னை தெற்கு (மேற்கு)- என்.பாலகங்கா, தென்சென்னை தெற்கு(மேற்கு)- விருகை வி.என்.ரவி.
சென்னை புறநகர் – கே.பி.கந்தன், காஞ்சிபுரம்- வி.சோமசுந்தரம், செங்கல்பட்டு கிழக்கு- திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், திருவள்ளூர் வடக்கு- சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் மத்திய மாவட்டம்- பா.பெஞ்சமின், திருவள்ளூர்தெற்கு- வி.அலெக்சாண்டர், திருவள்ளூர் கிழக்கு- மாதவரம் வி.மூர்த்தி.
வேலூர் மாநகர்- எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் புறநகர்- த.வேலழகன், திருப்பத்தூர்- கே.சி.வீரமணி,ராணிப்பேட்டை- சு.ரவி, திருவண்ணாமமலை வடக்கு- தூசி கே.மோகன், திருவண்ணாமலை தெற்கு- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கடலூர் கிழக்கு – கே.ஏ.பாண்டியன், கடலூர் தெற்கு- சொரத்தூர் இரா.ராஜேந்திரன், விழுப்புரம்- சி.வி.சண்முகம்.
கிருஷ்ணகிரி கிழக்கு- கே.அசோக்குமார், நாமக்கல்- பி.தங்கமணி, ஈரோடு புறநகர் மேற்கு – கே.ஏ.செங்கோட்டையன், கோவை புறநகர் வடக்கு- பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை புறநகர் தெற்கு- எஸ்.பி. வேலுமணி, திருச்சி புறநகர் வடக்கு- மு.பரஞ்சோதி.
அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன், நாகை- ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை- எஸ்.பவுன்ராஜ், திருவாரூர்- ஆர்.காமராஜ், மதுரைபுறநகர் கிழக்கு- வி.வி.ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் மேற்கு- திண்டுக்கல் சி.சீனிவாசன், விருதுநகர் கிழக்கு- ஆர்.கே.ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு- கே.டி.ராஜேந்திரபாலாஜி, திருநெல்வேலி- தச்சை என்.கணேசராஜா, தென்காசி வடக்கு- சி.கிருஷ்ணமுரளி, தென்காசி தெற்கு- எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், தூத்துக்குடி வடக்கு- கடம்பூர் ராஜு, தூத்துக்குடி தெற்கு- எஸ்.பி.சண்முகநாதன், கன்னியாகுமரி கிழக்கு- எஸ்.ஏ.அசோகன்.
வடசென்னை தெற்கு (கிழக்கு)-டி.ஜெயக்குமார், தென்சென்னை வடக்கு (கிழக்கு)- ஆதிராஜராம், தென்சென்னை வடக்கு(மேற்கு)- தி.நகர் சத்யா, தென்சென்னை தெற்கு(கிழக்கு)-எம்.கே.அசோக், செங்கல்பட்டு மேற்கு-சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு- பி.வி.ரமணா, கடலூர் வடக்கு – எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு – அருண்மொழிதேவன், கள்ளக்குறிச்சி-குமரகுரு, சேலம் மாநகர்- வெங்கடாசலம், சேலம் புறநகர்-இளங்கோவன், கிருஷ்ணகிரி மேற்கு- பாலகிருஷ்ணா ரெட்டி, தருமபுரி- கே.பி. அன்பழகன், ஈரோடு மாநகர்- கே.வி.ராமலிங்கம், ஈரோடு புறநகர்-கே.சி. கருப்பண்ணன்.
திருப்பூர் மாநகர்- பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் (கிழக்கு) -சி.மகேந்திரன், திருப்பூர் புறநகர் (மேற்கு) – உடுமலை ராதாகிருஷ்ணன், கோவை மாநகர் – அர்ச்சுணன், நீலகிரி- டி.வினோத், திருச்சி மாநகர்- வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் (தெற்கு)-பி.குமார், பெரம்பலூர்- ஆர்.டி.ராமசந்திரன், கரூர்-எம்.ஆர்.விஜயபாஸ்கர், தஞ்சை வடக்கு -சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு-ஆர்.வைத்திலிங்கம், புதுக்கோட்டை வடக்கு- சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு- பி.கே.வைரமுத்து, மதுரைமாநகர்- கே.செல்லூர் ராஜு, மதுரை புறநகர் – ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் கிழக்கு- நத்தம் விஸ்வநாதன், சிவகங்கை – செந்தில்நாதன், ராமநாதபுரம்-முனியசாமி , கன்னியாகுமரி -ஜான் தங்கம்.