அரச சேவை ஊழியர் சங்கங்கள் பல இன்று ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தத்தில், ரயில் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைவதில்லை என்றும் , தனியார் பஸ் சேவை ஊழியர்களும் பங்குகொள்வதில்லை எனவும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக பொது பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு இந்த பிரதிநிதிகள் உடன்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இதேபோன்று இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் பொது போக்குவரத்து சேவைகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு த்திருப்பதாகவும் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.