கோகோ கோலா-வை வம்புக்கு இழுத்த எலான் மஸ்க்.. ரெட் புல், மெக்டொனால்ட்ஸ்-ம் டேமேஜ்..!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பின்பு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பது அவருடைய டிவீட்டுகளில் இருந்து பார்க்க முடிகிறது.

டிவிட்டரை கைப்பற்றிய பின்பு பல முன்னணி பிராண்டுகளை நேரடியாக வம்புக்கு இழுத்து வருகிறார் எலான் மஸ்க் இதில் கோகோ கோலா, ரெட் புல், மெக்டொனால்ட் ஆகியவை அடங்கும்.

1 லிட்டர் பெட்ரோல்-க்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா? அதிக வரி வசூலிக்கும் மாநிலங்கள் எது?!

எலான் மஸ்க் படு பிசி

எலான் மஸ்க் படு பிசி

எலான் மஸ்க் கடந்த 3 நாட்களாக டிவிட்டர் கைப்பற்றல் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் மற்றும் crew4 விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி பயணத்தில் படு பிசியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை முதல் ஜாலி மோடுக்கு மாறியுள்ளார்.

கோகோ கோலா - கொக்கைன்

கோகோ கோலா – கொக்கைன்

டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கும் எலான் மஸ்க் பதிவு செய்துள்ள டிவீட்டில் அடுத்தது கோகோ கோலா நிறுவனத்தை வாங்கி மீண்டும் கொக்கைன்-ஐ கலக்க வேண்டியது தான் என டிவிட் செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு 2 மணிநேரத்தில் 15 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

3.5 கிராம் கொக்கைன்
 

3.5 கிராம் கொக்கைன்

1894ல் முதல் முறையாகக் கோகோ கோலா பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்த போது ஒரு பாட்டிலில் 3.5 கிராம் கொக்கைன் கலக்கப்பட்டு இருந்தது. இதை மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வாங்க எலான் எனப் பிரனாய் பத்தோல் டிவீட் செய்துள்ளார்.

ரெட் புல்

ரெட் புல்

பிரனாய் பத்தோல்-ன் டிவீட்டுக்குப் பதில் அளித்துள்ள எலான் மஸ்க், வாங்க ரெட் புல் நிறுவனத்தை ஓடவிடுவோம் என டிவீட் செய்துள்ளார். ஏற்கனவே கோகோ கோலா-வை இழுத்தது போதாமல் தற்போது ரெட் புல் நிறுவனத்தையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

ஆனால் இதோடு நிற்கவில்லை எலான் மஸ்க்

மெக்டொனால்ட்ஸ்

மெக்டொனால்ட்ஸ்

எலான் மஸ்க் டிவீட் செய்துள்ளதாக வெளியான ஒரு மீம்-ல் இப்போது நான் மெக்டொனால்ட் நிறுவனத்தை வாங்கி அனைத்து ஐஸ்க்ரீம் மெஷின்களையும் சரி செய்யப் போகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தது.

இதைப் புகைப்படத்திற்கு எலான் மஸ்க் வழக்கம் போல் சர்காசமாக, கேளுங்கள், என்னால் அற்புதங்களைச் செய்ய முடியாது எனப் பதிவிட்டு அசத்தியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon musk buying Coca-Cola to put the cocaine back in funny tweet viral on internet

Elon musk buying Coca-Cola to put the cocaine back in funny tweet viral on internet அடுத்தது கோகோ கோலா-வை வாங்கிக் கொக்கைன்-ஐ கலக்க வேண்டியது தான் – எலான் மஸ்க் அதிரடி டிவீட்

Story first published: Thursday, April 28, 2022, 11:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.