விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா,
சமந்தா
உள்ளிட்டோர் நடித்த
காத்து வாக்குல ரெண்டு காதல்
படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. சமந்தாவின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட்டுள்ளனர்.
ட்ரெய்லரை பார்த்தே பலரும் விக்னேஷ் சிவனை விளாசினார்கள். இந்நிலையில் படம் பார்த்த ஒரு சிலருக்கு தான் திருப்தி ஏற்பட்டிருக்கிறது. மற்றவர்களோ படததை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.
நீங்க போய் இப்படி பண்ணலாமா நயன்தாரா?: ரொம்ப தப்பாச்சே
படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,
அண்மையில் வெளியான மோசமான படங்களில் ஒன்று காத்து வாக்குல ரெண்டு காதல். சமந்தாவின் பிறந்தநாளுக்கு இதைவிட மோசமான பரிசு கொடுக்க முடியாது.
இதெல்லாம் ஒரு கதைனு எப்படி சார் படம் எடுத்தீர்கள்?. படம் பார்க்கும்போதே செம கடுப்பாகிவிட்டது. இந்த கதை உதவாது என்பது ஒரு இயக்குநராக உங்களுக்கு எப்படி தெரியாமல் போய்விட்டது?
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்பை குறை சொல்ல முடியாது. அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் கதை தான் சொதப்பல்.
விக்னேஷ் சிவன் நீங்கள் பேசாமல் பாடல் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளலாம். எங்களை சோதிக்காதீங்க ராசா என தெரிவித்துள்ளனர்.