HIV வீட்டிலேயே பரிசோதனை செய்வதற்கான வசதி

HIV நோய் தொடர்பான பரிசோதனைகள் தற்போது  நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனைக்காக இணையத்தளத்தின் மூலம் அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என்று தேசிய பாலியல் நோய் ஒழிப்பு மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணயகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் HIV யினால் பாதிக்பப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் இருந்த போதிலும் புதிதாக அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது இலங்கையில் இந் நோயினால் பரிக்கப்பட்ட 3,700 பேர் வாழ்கின்றனர்.

இலங்கையில் கடந்த வருடத்தில் HIV  தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 410 என பதிவாகியுள்ளது.

அத்தோடு 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 மற்றும் 2021 வருடங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளுக்கான வரையறையினால் HIV பரிசோதனைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

பரிசோதனையை மேற்கொள்ள விரும்புவோர் https://www.know4sure.lk/ என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து  இதற்கான நேரத்தை ஒதுக்கி கொள்ள முடியும்.

011 266 7163 அல்லது 070 3633 533   என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டும் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமாக  071 637 91 92  என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு HIV நோயை சுயமாக பரிசோதனை செய்யும் உபகரங்களை வீட்டிற்கு கொண்டுவந்து பரிசோதனை செய்துகொள்ள முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.