எத்தனையோ மாணவர்களுக்கு மாலை சூட்டியுள்ளேன் ஆனால்..! கண்கலங்கிய அன்பில் மகேஷ்

11 மாத காலமாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்துகொண்டு பல மாலைகளை மாணவர்களுக்கு சூட்டியுள்ளேன், ஆனால் முதன்முறையாக நேற்று உயிரிழந்த 8 ஆம் வகுப்பு மாணவனின் சடலத்துக்கு மாலை அணிவித்தேன் என உருக்கமாக கண்கள் கலங்கியவாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
சட்டமன்றத்தில் வினாக்கள் விடைகள் நேரத்தில் தஞ்சாவூர் களிமேடு விபத்து குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தஞ்சாவூர் களிமேட்டில் அதிகாலை 3 மணியிலிருந்து 3.10 மணிக்குள் விபத்தது நடந்தது என்றாலும், காலை 5 மணிக்கே முதலமைச்சர் என்னை தொடர்பு கொண்டார். அதிகாலையிலேயே அதிகாரிகள் முதலமைச்சரை தொடர்பு கொண்டுள்ளனர் என்றால் எத்தகைய சுதந்திரத்தை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என்பதை உணர முடிகிறது.
image
11 மாத காலமாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்துகொண்டு பல மாலைகளை மாணவர்களுக்கு சூட்டியுள்ளேன், ஆனால், முதன்முறையாக நேற்று உயிரிழந்த 8 ஆம் வகுப்பு மாணவனின் சடலத்துக்கு மாலை அணிவித்தேன் என கலங்கிய கண்களுடன் உருக்கமாகக் கூறினார். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இந்து சமய அறநிலையத் துறை மூலம் கண்காணிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தன்னை தொடர்புகொண்டு தெரிவித்தார்.
image
மின்சாரத்துறை அமைச்சர், மின் வாரிய அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி இருந்தார்;. அனைவரும் ஆறுதலாக இருந்தார்கள் என்ற அன்பில் மகேஷ். உடனடியாக தனி நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்பதை மட்டுமே முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினால் தான், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியும் என்றவர் நம் முதலமைச்சர் எனவும் சுட்டிக்காட்டினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.