குஜராத்-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மார்கோ ஜான்சென் வீசிய பந்தை ரஷித் கான் சிக்ஸர் விளாசியதை கண்டு முத்தையா முரளிதரன் கோபத்தில் கத்திய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றிப்பெற்றது.
போட்டியின் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மார்கோ ஜான்சென் பந்து வீச திவாட்டியா பேட்டிங் செய்தார்.
முதல் பந்தை சிக்ஸர் விளாசிய திவாட்டிய, 2வது பந்தில் 1 ரன் எடுத்தார்.
பின் 3வது பந்தை சந்தித்த ரஷித் கான் சிக்ஸர் விளாசினார், 4வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை.
கடைசி 2 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷித் கான் 5வது பந்தை மீண்டும் சிக்ஸர் விளாசி மிரட்டினார். இதைக்கண்ட ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், பொறுமையை இழந்து கோபத்தில் கொந்தளித்தார்.
Muttiah Muralitharan was FURIOUS at Marco Jansen’s final over 😡😡😡 pic.twitter.com/xIk4NDethi
— Pant’s Reverse Sweep (@SayedReng) April 27, 2022
ஐரோப்பிய நாட்டை தாக்க ரஷ்யா தயார்! உக்ரேனிய அமைச்சர் எச்சரிக்கை
குஜராத் அணி வெற்றிக்கு கடைசி 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலைியல், அதையும் சிக்ஸர் விளாசிய ஐதராபாத் அணியை மிரளவைத்தார் ரஷித் கான்.
Rashid Khan and Tewatia : Game changer of the day !
What a Match ❤️ pic.twitter.com/cr6FywX9df— Dawn2dusk 🇮🇳 (@Roopa_hope) April 27, 2022
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.