Elon Musk: ட்விட்டரில் எலான் மஸ்க் ஏற்படுத்தவிருக்கும் புதுமைகள்; பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

உலகின் மிகப்பெரும் மைக்ரோ புளாகிங் தளமான ட்விட்டரை
எலான் மஸ்க்
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வாங்கினார். இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் ($44 பில்லியன் டாலர்) அளவில் இந்த வர்த்தகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ட்விட்டரின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும், அனைவரும் சுதந்திரமாகப் பேசலாம் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனரும்,
ட்விட்டர்
உரிமையாளருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார். அதில் முக்கியமாக ட்விட்டர் மெசேஜ்களுக்கு (DM)
End To End Encryption
பாதுகாப்பு அம்சத்தை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பாதுகாப்புடன் கூடிய சுதந்திரம்

“சுதந்திரமான பேச்சு என்பது செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும், மேலும் ட்விட்டர் என்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் டிஜிட்டல் தளமாகும்” என்று மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

மேலும், “புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலமும், நம்பிக்கையை அதிகரிக்க அல்காரிதம்களை ஓபன் சோர்ஸ் (Open Source) ஆக்குவதன் மூலமும், ஸ்பேம் போட்களைத் தோற்கடிப்பதன் மூலமும், அனைத்து மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும், ட்விட்டரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக மாற்ற முடியும். இதையே நான் விரும்புகிறேன்.” என்று தெரிவித்திந்தார்.

ட்விட்டர் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. அதனை சரியான வழிகளில் செயல்படுத்த சமூகத்துடன் இணைந்து நான் பணியாற்ற விரும்புகிறேன் எனவும் மஸ்க் கூறியுள்ளார்.

இனி சுதந்திரமாகப் பேசலாம் – ட்விட்டர் கடந்து வந்த பாதை!

அமெரிக்க நிறுவனங்களுக்கு இலக்கு

ட்விட்டரில் இன்னும் நிறைய வேடிக்கைகளை பயனர்கள் அனுபவிக்கலாம் என்று தெரித்திருக்கும் எலான் மஸ்க், அமெரிக்க பெரு நிறுவனங்களையும் வம்புக்கு இழுத்துள்ளார். அவரது மற்றொரு ட்விட்டர் பதிவில், பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோக்க கோலாவை (Coca-Cola) வாங்க போவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் வாசி, கோகோ கோலா தொடங்கப்பட்ட 1894 காலகட்டத்தில் ஒரு பாட்டிலில் 3.5 கிராம் அளவுக்கு கொக்கைன் கலக்கப்பட்டு இருந்தது. இதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வாருங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், வாருங்கள் Red Bull-ஐ ஓட விடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல, மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை வாங்கி, ஐஸ்கிரீம் மெஷின்களை சரிசெய்யுங்கள் என்ற பதிவுக்கு, மஸ்க் “என்னால் அற்புதங்களை செய்ய முடியாது” என நக்கலாக பதிலளித்துள்ளார்.

Alert: இந்த 4 எழுத்துகள் இருந்தால் அலர்ட்! போஸ்புக் மெசஞ்சரில் சுழலும் ஆபத்து!

போலி ஃபாலோவர்ஸ்

இதனிடையில், டேவ் ரூபின் எனும் எழுத்தாளர், நியூயார்க், ஃபோர்ப்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளுக்கு எப்படி போலியாக ஃபாலோவர்ஸை சேர்த்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா என தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கும் பதிலளித்துள்ள எலான் மஸ்க், நான் அதை கவனித்து வருகிறேன் என்று கூலாக பதில் கொடுத்துள்ளார்.

கவனம் பெறும் எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியப் பிறகு எலான் மஸ்கின் பக்கத்தை அதிகபடியான பயனர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அதாவது, கடந்த சில நாள்களாக மில்லியன் கணக்கிலான பயனர்கள் எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோ செய்துள்ளனர் என பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.