ரஷ்யாவை அச்சுறுத்தும் நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல்.. மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் நேரடி எச்சரிக்கை

உக்ரைன் பிரச்னையில் தலையிடும் நாடுகளால் தாங்கள் அச்சுறுத்தப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பேசிய அவர், ரஷ்யாவை அச்சுறுத்தும் எவருக்கும் தங்களின் பதிலடி மின்னல் வேகத்தில் இருக்கும் என்று எச்சரித்தார்.

எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்குத் தேவையான ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட புதின், அதனால் தாங்கள் பெருமை கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.

உக்ரைனை நண்பனாக பாவித்து வந்ததாகவும் மேற்கத்திய நாடுகள் அதனை ரஷ்யாவுக்கு எதிரான நாடாக மாற்றி விட்டதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.