புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார். முதல்வர் செயல்படாமல் இருந்திருந்தால் கடந்த ஓர் ஆண்டில் எப்படி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், ஒன்றிய அரசின் உதவியுடன் அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என கூறினார்.