Realme GT 2: பிளாக்‌ஷிப் ரியம்மி போன் விற்பனை – விலை, அம்சங்கள் மற்றும் சலுகைகள் என்ன!

சமீபத்தில்
Realme GT 2
ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று Flipkart மற்றும்
ரியல்மி
தளங்களில் தொடங்கியது.
Snapdragon 888 5G
புராசஸர், சாம்சங் E4 AMOLED டிஸ்ப்ளே, 360Hz டச் சேம்பிளிங் ரேட், 50MP மெகாபிக்சல் Sony OIS கேமரா ஆகிய இதன் சிறப்பம்சங்களாக உள்ளது.

முன்னதாக வெளியான இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பான
ரியல்மி ஜிடி 2
ப்ரோ போனின் அதே Paper Tech Master டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று நிறங்களில் புதிய ரியல்மி போன் வாங்கக் கிடைக்கிறது. இதன் அடிப்படை பதிப்பான 8GB+128GB வகையின் விலை ரூ.34,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் வங்கி சலுகைகள் வழங்கபடுகின்றன. மேலும், அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.13,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை குறைந்த விலைக்கு வாங்க முடியும்.

ரியல்மி ஜிடி 2 அம்சங்கள் (Realme GT 2 Specifications)

புதிய ரியல்மி போனில் 6.62″ இன்ச் சூப்பர் AMOLED E4 சாம்சங் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 2400×1080 பிக்சல் ரெசலியூஷனை இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேயின் மேல்பாகத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு நிறுவப்பட்டுள்ளது. 120Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை இது பெறுகிறது. இதன் டச் சேம்பிளிங் ரேட் 360Hz ஆக இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான realme UI 3.0 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை குவால்காம் Snapdragon 888 5ஜி புராசஸர் இயக்குகிறது. புதிய தலைமுறை அட்ரினோ கிராபிக்ஸ் எஞ்சின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 2 போனின் பேபர் டெக் மாஸ்டர் டிசைன் ஒரு புதுவித லுக்கை அளிக்கிறது.

வளைந்த டிஸ்ப்ளே உடன் வெளியாகும் முதல் Tecno போன்!

ரியல்மி ஜிடி 2 கேமரா (Realme GT 2 Camera)

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 16MP மெகாபிக்சல் SONY IMX471 Sensor கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க மூன்று கேமரா கொண்ட அமைப்பு உள்ளது. இதில் முதன்மை சென்சாராக SONY IMX766 OIS 50MP மெகாபிக்சல் கேமரா, 8MP மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மெகாபிக்சல் மைக்ரோ லென்ஸ் ஆகிய கேமராக்களைக் கொண்டுள்ளது.

ப்ளூடூத் 5.2, வைஃபை 6, யூஎஸ்பி டைப் சி, மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், ஆகிய இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இந்த போனானது டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வரும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

Poco M4 5G: ஆட்டத்துக்கு ரெடியா – வெளியாகும் புதிய போக்கோ 5ஜி போன்

ரியல்மி ஜிடி 2 பேட்டரி (Realme GT 2 Battery)

இந்த ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஸ்மார்ட்போன் உடன் பாஸ்ட் சார்ஜரும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 65W சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

துல்லியமான சிக்னல்களுக்காக Antenna Array Matrix System பயன்படுத்தப்பட்டுள்ளது. போனை சூடாகாமல் தடுக்க Stainless Steel Vapour Cooling System Max என்ற புதிய அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 360 டிகிரி NFC, லைட் சென்சார்ஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன.

ரியல்மி ஜிடி 2 விலை (Realme GT 2 Price India)

ரியல்மி ஜிடி 2 போன் 8GB, 12GB ஆகிய இரு ரேம் தேர்வுகளில் வருகிறது. மேலும் 128GB, 256GB என இரண்டு UFS 3.0 ஸ்டோரேஜ் மெமரி ஆதரவும் உள்ளது. பேப்பர் கிரீன், பேப்பர் வைட், ஸ்டீல் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் 8GB+128GB வேரியன்டின் விலை ரூ.34,999 ஆகவும், 12GB+256GB விலை ரூ.38,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம், ரியல்மி தளம், ரியல்மி ஸ்டோர்ஸ் மூலம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. அறிமுக சலுகையாக HDFC வங்கி கடன் அட்டை அல்லது Debit card பயனர்களுக்கு ரூ.5000 கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.13,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இந்த சலுகைகளைப் பயன்படுத்தி ரியல்மி பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை வெறும் ரூ.16,999க்கு வாங்க முடியும்.

Realme-GT-2 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Qualcomm Snapdragon 888டிஸ்பிளே6.51 inches (16.54 cm)சேமிப்பகம்128 GBகேமரா64 MP + 8 MP + 5 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை39999ரேம்8 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.