Tamil Serial Bharathi Kannamma Rating Update : என்ன பாரதி ஊருக்கெல்லாம் நல்ல உபதேசம் பண்றீங்க ஆன உங்களால அப்படி இருக்க முடியாலயே… அட்வைஸ் மட்டும் பண்ணுவோம் ஆனா ஃபாலோ பண்ணமாட்டோம் அப்படித்தானே…
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களின் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சந்தேகம், மற்றும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு அதிரடியாக ட்விஸ்ட்களுடன் விறுவிறுப்பின் உச்சத்தை தொட்டது.
இதன் காரணமாக சீரியலுக்கு உண்டாக ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்த நிலையில். கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து வருகிறது. வெண்பாவுக்கு ஒரு பக்கம் அவங்க அம்மா தொல்லை கொடுக்க மறுபுறம் பாரதி கண்ணம்மாவுக்கு தொல்வை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே பாரதியின் குடும்ப நண்பர் ஒருவர் திறந்துள்ள மருத்துவமனையில் பாரதி சீப் டாக்டராக இருக்கும் நிலையில், அதே மருத்துவமனையில் அட்மின் ஹெட்டாக கண்ணம்மா வேலை செய்கிறார். தற்போது இருவரும் ஒரு இடத்தில் எலியும் பூணையுமாக சண்டை போட்டு வருவது ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருவது போல் உள்ளது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட கண்ணம்மா நமக்கு துரோகம் செய்வாளா என்று யோசிக்காத பாரதி இப்போது வேறு ஒரு வருக்கு அட்வைஸ் செய்கிறார். இதை பார்த்து கண்ணம்மா அவனுக்கு அட்வைஸ் பண்ற முதல்ல நீ யோக்கியமாக இருக்கியாடா என்று கேட்பது போல் ரியாக்ஷன் கொடுக்கிறார்.
பாரதி வேலை செய்யும் ஹாஸ்பிடலில் ஒரு பெண் அடிப்பட்டு வந்து சேர்கிறார். அவளிடம் விசாரிக்கும்போது கணவர் குடித்துவிட்டு வந்து தன்மை அடித்துவிட்டதாக சொல்கிறாள். அப்போது அவளது கணவன் அங்கே வர, பாரதி அவனை தட்டி கேட்கிறான் இப்போது அந்த நபர் அவனது மனைவியையும், பாரதியையும் .இணைத்து பேசுகிறான்.
இதனால் கோபமாகும் பாரதி அவனை அடிக்க போக செக்கியூரிட்டி எல்லாம் வந்து தடுத்து விடுகின்றனர். அப்போ பார்த்து பாரதி ஒரு டைலாக்’ பேசுவார் பாருங்க… பொண்டாட்டிய சந்தேகப்படுறவன் எல்லாம் ஆம்பிளையா அவளை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு இப்போ இப்படி பண்றீயே உன்னல்லாம் சும்மா விடக்கூடாது என்று சொல்ல. கண்ணம்மா பாரதியை கடுப்பாக பார்க்கிறாள்.
இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரிய சொன்னிங்க கேப்டன் ஆனா இதை நீங்களே ஃபாலோ பண்ணலனா எபப்டி? முதல்ல நீங்க திருந்துங்க அப்புறம் நாட்ட திருத்தலாம் டாக்டர் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.