நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்றும் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரிக்கு மத்தியில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எனினும் அடுத்த காண்ட்ராக்டில் ரோல் ஓவர் செய்வது, புதிய ஆர்டர்கள் என பல காரணிகள் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
தேவையிருந்தும் சப்ளை செய்ய முடியவில்லை.. 20% உற்பத்தி பாதிக்கலாம்.. பஜாஜ் ஆட்டோ வேதனை!
அன்னிய முதலீடுகள்
கடந்த ஏப்ரல் 27 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 4064.54 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1917.51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.
ரூபாய் நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 11 பைசா குறைந்து, 76.63 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 76.52 ரூபாயாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது வெளியேறி வரும் நிலையில் சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 368.38 புள்ளிகள் அதிகரித்து, 57,187.77 புள்ளிகளாகவும், நிஃப்டி 189.90 புள்ளிகள் அதிகரித்து, 17,228.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 295.96 புள்ளிகள் அதிகரித்து, 57,115.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 93.20 புள்ளிகள் அதிகரித்து, 17,131.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1525 பங்குகள் ஏற்றத்திலும், 398 பங்குகள் சரிவிலும், 78 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ லைஃப், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், வேதாந்தா, பயோகான், பிஎன்பி ஹைவுசிங் பைனான்ஸ், வருன் பேவரேஜ்ஸ், கொரமண்டல் இண்டர்னேஷனல் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. பிஎஸ்இ ஆயில் & கேஸ் 1% மேலாக ஏற்றத்தில் காணப்பட்டது. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல், சன் பார்மா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, ஹெச்.சி.எல் டெக், பஜாஜ் பைனான்ஸ், பிரிட்டானியா, பார்தி ஏர்டெல் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, மாருதி சுசுகி, பவர் கிரிட் கார்ப், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பின்செர்வ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது 10.4 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 227.31 புள்ளிகள் அதிகரித்து, 57,046.70 புள்ளிகளாகவும், நிஃப்டி 71.45 புள்ளிகள் அதிகரித்து, 17,109.85 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex, Nifty gains amid mixed global cues: HUL, Bajaj auto, axis bank in focus
opening bell: sensex, Nifty gains amid mixed global cues: HUL, Bajaj auto, axis bank in focus/கவனிக்க வேண்டிய ஹெச்யுஎல், பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி.. ஆறுதல் தந்த சென்செக்ஸ்..!