டெல்லி: விமானப் போக்குவரத்து துறை குழு ஆய்வு செய்ததில் பரந்தூர், பன்னூரில் 2வது விமான நிலையம் அமைக்க சாதக வாய்ப்புள்ளது தெரியவந்திருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் இரவு நேரப் பணிகளை நீட்டிப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன என்று அமைச்சர் ஜோதிர் ஆதித்யா தெரிவித்துள்ளார். பசுமை வழி விமான நிலையம் அமைக்கவும், பெரிய விமானங்களை தரையிறக்க ஓடுதளம் அமைக்க 633.17 ஏக்கர் நிலம் தேவை. ஓடுதளம் அமைக்க இதுவரை 528.65 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோதிர் ஆதித்யா கூறினார்.