பிரபல திரைப்பட நடிகர் சலீம் கவுஸ் தனது 70வது வயதில் காலமானார்.
தமிழில் வெற்றிவிழா, சின்ன கவுண்டர், ரெட், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சலீம் கவுஸ்.
இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சலீம் கவுஸ்.இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சலீம் கவுஸ் இன்று உயிரிழந்தார்.
அவரின் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து சலீம் கவுஸ் மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.