அமேசான், பிளிப்கார்ட்-க்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு..!

இந்திய ரீடைல் சந்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டும் நிலையில் ஆன்லைன் ரீடைல் வர்த்தகத்தைப் பிரிவில் 80 சதவீத வர்த்தகத்தை அமேசான் மற்றும் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட் கையில் உள்ளது.

தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க!

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக ஆதார் வெற்றி நாயகன் நந்தன் நிலேகனி களத்தில் இறங்கியுள்ளார்.

நந்தன் நிலேகனி

நந்தன் நிலேகனி

இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இந்திய ரீடைல் சந்தையில் இருக்கும் சிறு மற்றும் குறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் இணைக்கும் வரையில் ஓப்பன் டெக்னாலஜி நெட்வொர்க்-ஐ உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.

அரசு ஈகாமர்ஸ் தளம்

அரசு ஈகாமர்ஸ் தளம்

நந்தன் நிலேகனி தலைமையில் உருவாக்கப்படும் இந்த முக்கியமான வர்த்தகத் தளத்தில் 5 ரூபாய் சோப்-ல் இருந்து 30000 -40000 விமான டிக்கெட் வரையில் மக்கள் வாங்கவும் முடியும், இதற்கான சேவையை நிறுவனங்களும் அளிக்க முடியும்.

அமேசான், பிளிப்கார்ட்
 

அமேசான், பிளிப்கார்ட்

ஆன்லைன் வர்த்தகத் தளமான அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் வருகை மூலம் சிறு மளிகை கடைகள், பெட்சிக் கடைகள் எல்லாம் மாயமாகும் நிலை உருவானது மட்டும் அல்லாமல் ரீடைல் துறையில் இருக்கும் பல கோடி வேலைவாய்ப்புகள், தொழில்முனைவோர்கள் காணாமல் போகும் நிலை உருவானது.

லாபமற்ற டிஜிட்டல் வர்த்தகத் தளம்

லாபமற்ற டிஜிட்டல் வர்த்தகத் தளம்

இந்நிலையில் மத்திய அரசு லாபமற்ற தளமாக டிஜிட்டல் வர்த்தகத்திற்கு ஓப்பன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் காமர்ஸ் என்னும் தளத்தை உருவாக்க உள்ளது. இந்தத் தளத்தின் மூலம் அனைத்துத் தரப்பு ரீடைல் வர்த்தகர்களும் ஆன்லைன் வர்த்தகச் சந்தைக்குள்ள நுழைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 சதவீத சந்தை

6 சதவீத சந்தை

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் இதுவரையில் இந்தியாவில் 24 பில்லியன் டாலர் முதலீடு செய்து 1 டிரில்லியன் டாலர் ரீடைல் சந்தையில் சுமார் 6 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட் வெறும் 6 சதவீத சந்தையை மட்டுமே பிடித்திருந்தாலும், இதன் தாக்கம் மிகவும் அதிகம்.

நந்தன் நிலேகனி பதில்

நந்தன் நிலேகனி பதில்

உலக நாடுகளில் இதுப்போன்ற திட்டத்தை இதுவரை யாரும் செயல்படுத்தவில்லை என்றாலும், இந்தியாவிற்கு இத்தகைய தளத்திற்கான சேவை உருவாகியுள்ளது என நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

5 முக்கிய நகரங்களில் சோதனை

5 முக்கிய நகரங்களில் சோதனை

மேலும் அரசு உருவாக்கும் இந்த லாபமற்ற டிஜிட்டல் வர்த்தகத் தளத்தை அடுத்த மாதம் மாதிரி வடிவத்தை நாட்டின் 5 முக்கிய நகரங்களில் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தின் வெற்றி தான் இத்தளத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும்.

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

உண்மையில் அரசால் இதை எளிதாகச் செய்ய முடியும், எப்படியென்றால் அரசு உருவாக்கும் இத்தளம் மார்கெட்பிளேஸ் ஆகவும், அனைத்து ரீடைல் கடைக்காரர்களும் விற்பனையாளராகப் பதிவு செய்யப்படுவார்கள், லாஜிஸ்டிக்ஸ் சேவைக்கு இந்தியத் தபால் துறை உள்ளது, பேமெண்டுக்கு அரசின் யூபிஐ சேவை உள்ளது.

இந்தியா மாஸ்

இந்தியா மாஸ்

இத்தளத்தைக் கட்டமைக்க ஏற்கனவே திறமையான அதிகாரிகள் அரசிடம் இருக்கும் நிலையில் சரியான நிர்வாகக் குழுவை மட்டுமே நியமித்தால் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இந்திய அரசுக்கு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Nandan Nilekani building Open Network for Digital Commerce to counter Flipkart, Amazon

Nandan Nilekani building Open Network for Digital Commerce to counter Flipkart, Amazon அமேசான், பிளிப்கார்ட்-க்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு..!

Story first published: Thursday, April 28, 2022, 17:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.