திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், ஒட்டப்பாலம் அருகே உள்ள மூலஞ்சூரைச் சேர்ந்தவர் அப்பு (வயது 72). இவர் தனது சமையலறையில் வைத்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு தனது உறவினரின் மகளான சிறுமியை தான் அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு பாலக்காட்டில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் (போக்சோ) நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்து வந்தார். விசாரணை முடிவில் அவர் குற்றவாளி அப்புவுக்கு 65 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதேபோல் 2017ம் ஆண்டு நடந்த மற்றொரு சிறுமி பாலியல் வழக்கில் சாவக்காட்டைச் சேர்ந்த சயீத் முகம்மது என்பவருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து குன்னம்குளம் விரைவு சிறப்பு நீதிமன்றம் (போக்சோ) உத்தரவிட்டுள்ளது.