அமெரிக்காவின் கனேட்டிகட் மாநிலத்தில், 8 வயது சிறுவன் ஒருவன், தீயிட்டு கொளுத்திய டென்னிஸ் பந்தை மற்றொரு சிறுவனின் முகத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டாம்னிக் என்ற 6 வயது சிறுவன் வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தான். பக்கத்து வீட்டில் வசித்த அந்த 8 வயது சிறுவன், டாம்னிக்-கை ஆசையாக அழைத்து, பின் டென்னிஸ் பந்தில் பெட்ரோல் ஊற்றி, லைட்டரால் அதை கொளுத்தி டாம்னிக்கின் முகத்தில் வீசி உள்ளான்.
வலியால் துடித்த டாம்னிக் கதறியபடியே தாயாரிடம் ஓடியுள்ளான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டாம்னிக், விரைவில் குணமடைந்து விடுவான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டாம்னிக்கின் மருத்துவ சிகிச்சைக்காக அவனது தாயார் இணையத்தில் ஒன்னேகால் கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார்.