நிட்டம்புவ பிரதேசத்தில் மக்கள் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டத்தினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிட்டம்புவ மக்கள் இன்றும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டயர்களை எரித்தும், சாலை மறியல் செய்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டயர்கள் பற்றி எரிவதனால் வீதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இன்றைய வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் உறுதியாக பணிகளுக்குச் செல்வதாக வழங்கிய வாக்குறுதியை மீறி, இன்று பல ஊழியர்கள் சுகவீன விடுமுறையை எடுத்துள்ளதாக இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளரான தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.