சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்துள்ளார்.
அந்த பதவிக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன் தேர்வு பெற்றுள்ளார். அண்மையில் சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு, எடப்பாடி பழனிசாமி விண்ணப்பித்தார்.
அன்றைய நாளிலேயே, சேலம் புறநகர் மாவட்டச் செயலர் பதவிக்கு, இளங்கோவனையும், எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்ய வைத்ததாக சொல்லப்படுகிறது.
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தபோதும், 2017ல் முதலமைச்சராக பொறுப்பேற்றபோதும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக திகழும் நிலையிலும், மாவட்டச் செயலாளர் பதவியிலும் நீடித்தார்.