தஞ்சை மாவட்டம், களிமேட்டில் நேற்று நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்களின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த களிமேட்டை சேர்ந்த மின்வாரிய ஊழியர் திருஞானம், சூழ்ந்திருந்த தண்ணீரை மிதித்ததில் காயம் ஏற்பட்டதை பொருட்படுத்தாமல் உயர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உயர் அதிகாரிகள் உடனடியாக தஞ்சையில் இருந்தவாறே களிமேட்டுக்கு செல்லும் உயர்அழுத்த மின்பாதை இணைப்பு வோல்டேஜை துண்டித்தனர். மின்சாரம் பரவுவது தடுக்கப்பட்டது.
200-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றிய மின்சார ஊழியர் திருஞானம் தற்போது தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.