சிபிராஜின் ரங்கா மே 13ல் திரைக்கு வருகிறது
கடந்த 2017ம் ஆண்டு சிபிராஜ், நிகிலா நடிப்பில் ரங்கா என்ற படம் தயாரானது. இந்தப்படத்தை வினோத் என்பவர் இயக்க, ராம் ஜீவன் ராமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் படம் திரைக்கு வராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த ரங்கா படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு சிபிராஜ் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சிபிராஜ் நடித்துள்ள இன்னொரு படமான மாயோன் ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.