அவதார் திரைப்படத்தின் 2ஆம் பாகமான அவதார் – தி வே ஆப் வாட்டர் படம் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அப்படத்தின் முதல் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், நேற்று அமெரிக்காவின் லாஸ் வெகாசில் நடைபெற்ற சினிமாகான் என்ற நிகழ்ச்சியில் அவதார் திரைப்பட போஸ்டர்களும், முன்னோட்ட காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.
மேலும், வரும் 6ஆம் தேதி திரையரங்குகளில் அப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.