என் எண்ணங்களை பொய்யாகிய செல்வராகவன்…பிரபல இயக்குனர் கருத்து..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களி இயக்கி தனக்கென ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குனர்
செல்வராகவன்
.இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் ,7g ரெயின்போ காலனி ,புதுப்பேட்டை ,ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும் படங்கள் ஆகும்.

இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் செல்வராகவன் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.சமீபத்தில் விஜய்யுடன் அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக
சாணி காயிதம்
திரைப்படம் வெளியாகவுள்ளது.

KGF படத்திற்கு சவால்விடும் தமிழ் படம்..ரிலிஸுக்கு முன்பே நூறு கோடி வியாபாரம்..!

முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர்
அருண் மாதேஸ்வரன்
இப்போது தற்போது அவரது அடுத்த அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

பழிக்குப் பழி கதைக் களம் கொண்ட இந்த ஆக்‌சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான இப்படம் கதாநாயகிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் ஒரு அநியாயம் இழைக்கப்படுவதுமான தலைமுறை சாபம் நிஜமாகும் கதையை சித்தரிக்கிறது.

செல்வராகவன்

பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது.., “நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம் எடுக்கும் போது இப்படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பாரென அவரை என் மனதில் குறித்து வைத்திருந்தேன்.

இப்படத்தில் அவர் நடிக்கும் பாத்திரம் அவர் இதுவரை செய்திராத ஒரு புதுமையான பாத்திரம். அவர் கண்டிப்பாக இதற்கு சரியாகப் பொருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை புதுமையான தோற்றத்தில் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் அவர் எனது முதல் தேர்வாக இருந்தார். இக்கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

கீர்த்தி சுரேஷ்

தனது கதாநாயகியின் பாத்திரத்திற்கு ஏற்ற நடிகரை முழு நம்பிக்கையோடு தேர்வு செய்த பின் அவரது சகோதரனாக நடிக்கச் சிறந்த நடிகரைத் தேடிய பயணித்ததைப் பற்றி கூறிய இயக்குனர் “செல்வா சார் திரைப்படத் துறையில் பிரபலாமான மற்றும் நன்கு அறியப்பட்ட இயக்குனர், அவர் இக்கதாபாத்திரத்தை ஏற்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.” என்றார்.

சாணி காயிதம் படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவனை அணுகி தனது விருப்பத்தை வெளிப்படுத்திய சூழல் குறித்து அருண் கூறுகையில் “சித்தார்த் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) செல்வா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் செல்வா சாரை அணுகுவது எளிதாக இருந்தது. அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன், அவருக்கு கதை பிடிக்கவே விரும்பி ஏற்றார்” என்றார்.

ஒரு பிரபல இயக்குனரை இயக்கிய அனுபவத்தைப் பற்றி மேலும் கூறிய அருண், “நான் அவரை ஒரு இயக்குனராகப் பார்த்தேன், அவர் அட்வைஸ் தருவாரா ? அல்லது எங்கள் பார்வைகள் வேறுபாட்டின் காரணமாக படைப்பு வேறுபாடுகள் இருக்குமா ? என்றெல்லாம் யோசித்தேன். ஆனால் தன்னை வெறும் நடிகராகவும், என்னை இயக்குனராகவும் நினைத்து கொண்டு என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து எனது தேவையற்ற சந்தேகங்களை அவர் பொய்யாக்கினார்.” என்றார்.

ஸ்கிரீன் சீன் மீடியாவின் பேனரின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சாணி காயிதம் திரைப்படம் மே-6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது.

பிறமொழி படங்கள் தமிழகத்தில் நல்லா ஓடுறது புதுசில்ல – மணிரத்னம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.