அம்பானியை பாலோ செய்யும் அதானி.. இதையும் விட்டு வைக்கவில்லை..!

இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குரூப் ஆகியவை பல துறையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தற்போது இருவரும் ஓரே துறையில் போட்டிப்போடும் நிலைப் பட இடங்களில் உருவாகியுள்ளது.

தற்போது அம்பானியும், அதானியும் மீடியா துறையில் போட்டிப்போடுவது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டி விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்திய மீடியா துறை

நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும் மீடியா துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைக் கொட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் - வாய்காம்18

ரிலையன்ஸ் – வாய்காம்18

இந்நிலையில் ரிலையன்ஸ் மற்றும் வாய்காம்18 இணைந்து வாய்காம்18-ஐ இந்தியாவின் மிகப்பெரிய டிவி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் முர்டோக்கின் லூபா சிஸ்டம்ஸ் மற்றும் முன்னாள் டிஸ்னி நிர்வாகி உதய் சங்கர் நிர்வாகம் செய்யும் போதி ட்ரீ நிறுவனம் சுமார் 13500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது

ரிலையன்ஸ் ஜியோ
 

ரிலையன்ஸ் ஜியோ

இந்த முதலீட்டின் வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ கட்டுப்பாட்டில் இருக்கும் ஜியோசினிமா தளத்தை வாய்காம்18 மற்றும் ரிலையன்ஸ் கட்டுப்பாடில் இருக்கும் வாய்காம்18 இந்தியா கிளைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் டிவி மற்றும் டிஜிட்டல் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியும்.

அதானி குழுமம்

அதானி குழுமம்

இதேவேலையில் அதானி குழுமம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மீடியா துறையில் இறங்குவதற்காக AMG மீடியா நெட்வொர்க்ஸ் என்னும் நிறுவனத்தைத் துவங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் வாயிலாகப் பிப்ளிஷிங், விளம்பரம், பிராட்காஸ்டிங், கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் போன்ற பிரிவில் தீவிரமாக இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ப்ளூம்பெர்க் பங்குகள்

ப்ளூம்பெர்க் பங்குகள்

இதேபோல் அதானி மீடியோ வென்சர்ஸ் நிறுவனம் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் இந்திய கூட்டணி நிறுவனமான Quintillion Business Media நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

 அம்பானி Vs அதானி

அம்பானி Vs அதானி

அதானி குழுமம் மீடியா துறையில் புதிதாக இறங்கியிருந்தாலும், தனது பணப் பலத்தின் மூலம் அதிகப்படியான நிறுவனத்தைக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதனால் விரைவில் மீடியா துறையில் ரிலையன்ஸ்-க்கு நிகரான அதானி குழுமமும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani and Ambani fighting each other in media sector

Adani and Ambani fighting each other in media sector அம்பானியை பாலோ செய்யும் அதானி.. இதையும் விட்டு வைக்கவில்லை..!

Story first published: Thursday, April 28, 2022, 18:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.