யார் இந்த விஜயா கட்டே? எலான் மஸ்க் வாங்கிய ட்விட்டர் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்தியர்!

ஹைதராபாத்தில் பிறந்த விஜயா கட்டே தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று டெக்சாஸில் வளர்ந்தவர். இவர் தற்போது ட்விட்டரின் சட்டம், கொள்கை மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றை வழிநடத்தும் தலைமை பொறுப்பில் உள்ளார். அவருடைய சில உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகளைப் பற்றியும் அவரைப் பற்றியும் எலான் மஸ்க் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.

அமெரிக்க தலைநகரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் கணக்கை சஸ்பெண்ட் செய்வதற்கும் அரசியல் விளம்பரங்களைத் தடை செய்வதற்கும் ட்விட்டரின் முக்கிய முடிவுகளுக்கு உறுதுணையாக இருந்த இந்திய-அமெரிக்க ஆலோசகர் விஜயா கட்டே சமீபத்தில், ட்விட்டர் சமூக ஊடக தளத்தை வாங்கிய கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் விமர்சனத்திற்கு ஆளானார். ஒரு முக்கிய போட்காஸ்ட் தொகுப்பாளரின் ட்வீட்டுக்கு பதிலளித்த எலான் மஸ்க், விஜயா கட்டேவை, “ட்விட்டரில் உள்ள சிறந்த தணிக்கை வழக்கறிஞர்” என்று வர்ணித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரைக்காக நியூயார்க் போஸ்ட்டை ட்விட்டர் தளம் சஸ்பெண்ட் செய்ததோடு, அது நம்பமுடியாத பொருத்தமற்ற ஒன்று என்று கூறினார்.

கிரிஸ்டல் மற்றும் சாகர் போட்காஸ்ட் உடனான பிரேக்கிங் பாயிண்ட்ஸின் இணை தொகுப்பாளரான சாகர் என்ஜெட்டி, “ட்விட்டரின் உயர்மட்ட வழக்கறிஞர் ஊழியர்களுக்கு உறுதியளிக்கிறார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதைப் பற்றி கூட்டத்தில் பேசியிருக்கிறார்” என்ற தலைப்பில் ஒரு அரசியல் கட்டுரையை ட்வீட் செய்திருந்தார். சாகர் என்ஜெட்டியின் ட்வீட்டுக்கு பதிலளித்த பிறகு, எலான் மஸ்க், விஜயா கட்டே மற்றும் பிரபலமற்ற போட்காஸ்டர் ஜோ ரோகன் ஆகியோரின் புகைப்படத்துடன் ஒரு மீம்மை வெளியிட்டார். ஜோ ரோகன் ட்விட்டர் இடதுசாரி சார்புடையது என்று குற்றம் சாட்டினார்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் தனது முடிவில், ட்விட்டர் தளத்தில் முழுமையான பேச்சுரிமையை உறுதிப்படுத்த விரும்புவதாக மீண்டும் மீண்டும் கூறினார். இது தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிகளை சமமாக திறம்பட வருத்தப்படுத்துகிறது என்று வலியுறுத்தினார்.

யார் இந்த விஜயா கட்டே?

ட்விட்டரில் சட்டம், கொள்கை மற்றும் நல்லெண்ணத்தின் தலைவராக உள்ள விஜயா கட்டே, ட்விட்டரின் உள்ளடக்கம் மற்றும் தளத்தின் பாதுகாப்புக் கொள்கைக்கு தலைமை தாங்கும் நிர்வாகிகள் குழுவை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளார். ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவது நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. ஜனநாயக உலக சட்டத்தில், எந்த உள்ளடக்கம் பொருத்தமானது மற்றும் எது பொருத்தமானது அல்ல என்பதை தளங்கள் தீர்மானிக்க அனுமதிக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

விஜயா கட்டே ஒரு தாராளவாத கருத்துடைய நிர்வாகி என்று கூறப்படுகிறார். அவருடைய சில முக்கிய கொள்கை முடிவுகளால் அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினரின் கோபத்தைப் பெற்றார்.

‘ப்ளூம்பெர்க்’ செய்தி அவரை ட்விட்டர் தளத்தின் ட்வீட் மற்றும் கணக்குகளைத் தடை செய்வதில் ‘இறுதி முடிவு எடுப்பவர்’ என்று அழைத்தது.

விஜயா கட்டே தனது முந்தைய அறிக்கைகளில், எலான் மஸ்க் கூறியது போன்ற ஒரு சார்பு குற்றச்சாட்டுகளையும் விஜயா கட்டே ஒப்புக்கொண்டார். “நாங்கள் என்ன செய்தாலும், நாங்கள் சார்புடையதாக குற்றம் சாட்டப்படுகிறோம். உள்ளடக்கத்தை விட்டுவிடுதல், உள்ளடக்கத்தைக் குறைத்தல் – இது மிகவும் ஒரு பெரிய இரைச்சலாக மாறியது” என்று கூறியதாக ப்ளூம்பெர்க் தெரிவித்தது.

விஜயா கட்டே, ட்விட்டருக்கு வெளியே குறைந்த அளவில் தன்னைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தி இருந்ந்தாலும், 2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர், அவர் ட்விட்டர் தளத்தில் அரசியல் விளம்பரங்களைத் தடை செய்தல் போன்ற குறிப்பிடத்தக்க முடிவுகளால் அவர் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டார். 2016 தேர்தல்கள் கண்ட சமூக ஊடக கையாளுதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபதின் கணக்கை இடைநீக்கம் செய்ததற்குப் பின்னணியில் இருந்தவர் விஜயா கட்டே.

டொனால்ட் டிரம்பின் கணக்கு மற்றும் அமெரிக்க தலைநகரில் வெடித்த வன்முறையின்போது ட்விட்டரில் தீவிர வலதுசாரி செல்வாக்கைக் கட்டுப்படுத்தியதன் பின்னணியில் விஜயா கட்டே இருந்தார்.

“மேலும் வன்முறை ஏற்படும் அபாயம் காரணமாக @realDonaldTrump இன் கணக்கு ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது” என்று விஜயா கட்டே ஜனவரி 9, 2021 அன்று ட்வீட் செய்தார்.

ஹைதராபாத்தில் பிறந்த விஜயா கட்டே தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று டெக்சாஸில் வளர்ந்தார். இவர் கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர். 2011-இல் ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, அவர் ஜூனிபர் நெட்வொர்க்கில் ஒரு மூத்த இயக்குநராகவும், கார்ப்பரேட் அசோசியேட் ஜெனரல் ஆலோசகராகவும் இருந்தார். இவர் புற்றுநோயைத் ஒழிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கார்டன்ட் ஹெல்த் நிறுவனம், புவி கண்காணிப்புத் துறையில் முன்னணியில் உள்ள பிளானட் மற்றும் மனிதாபிமான உதவி அமைப்பான மெர்சி கார்ப்ஸ் ஆகியவற்றின் குழுவிலும் உள்ளார்.

பொலிட்டிகோ செய்தியின்படி, அவர் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியுடன் நெருக்கமாக இருந்தார், அவருடன் 2019-இல் டிரம்ப் மற்றும் இந்தியாவில் தலாய் லாமாவை சந்திக்க ஓவல் அலுவலகத்திற்குச் சென்றார்.

விஜயா கட்டே மற்றும் நியூயார்க் போஸ்ட் சர்ச்சை

ஹண்டர் பைடனின் நியூயார்க் போஸ்ட்டின் அம்பலப்படுத்தலைக் கட்டுப்படுத்தப்படுவதில் விஜயா கட்டே உந்துசக்தியாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த செய்தி ஹண்டர் பைடனின் மடிக்கணினியில் கிடைத்த தகவலைப் பயன்படுத்தி, துணை அதிபர் ஜோ பைடன் உக்ரைனில் தனது மகனின் ஒரு ஆற்றல் நிறுவனத்திற்கு உதவ உக்ரைனில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தியதாகக் கூறியது.

2020 தேர்தலுக்கு சற்று முன்பு, அக்டோபர் 14 ஆம் தேதி இந்த கட்டுரை வெளியானது. மேலும், இது நியூயார்க் போஸ்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தவும் வழிவகுத்தது.

இந்த கட்டுரையில் காணப்பட்ட தகவல்கள் ஹேக்கிங் மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த கட்டுரை ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்தி, அதன் “ஹேக் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான கொள்கையை” மீறுவதாக உள்ளது என்று ட்விட்டர் கூறியது. அக்டோபர் 31 ஆம் தேதி, ட்விட்டர் அதன் கொள்கையை மாற்றியது, விஜயா கட்டேவின் முடிவைப் பற்றிய விமர்சனங்கள்ம் ஆதரவான கருத்துகளும் வெளியானது.

அந்த நேரத்தில் டோர்சி அதை ஒப்புக்கொண்டார். “நியூயார்க் போஸ்ட் கட்டுரையில் எங்கள் செயல்களைச் சுற்றியுள்ள எங்கள் தொடர்பு சிறப்பாக இல்லை. ட்வீட் அல்லது டிஎம் வழியாக URL பகிர்வைத் தடுப்பதில், அதை நாம் ஏன் தடுக்கிறோம் என்பதற்கான சூழல் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று கூறினார்.

குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட புகார் குறித்து விவாதிக்கும் போது, ​​ஹன்டர் குறித்த நியூயார்க் போஸ்ட் கட்டுரைக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதில் ட்விட்டர் கூட்டாட்சி சட்டங்களை மீறவில்லை என்று 2021 இல் அமெரிக்க தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. கட்டுரையைப் பகிர்வதைத் தடுப்பது “வணிகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதே தவிர தேர்தலை பாதிக்கும் நோக்கத்திற்காக அல்ல” என்று அமெரிக்க தேர்தல் ஆணையம் கூறியது.

இருப்பினும், எலான் மஸ்க் செவ்வாய்க்கிழமை இந்த முடிவை பொருத்தமற்றது என்று அழைத்தார்.

விஜயா கட்டே குறித்து எலான் மஸ்க்கின் ட்வீட்

விஜயா கட்டே எடுத்த முடிவைக் குறிப்பிட்டு எலான் மஸ்க்கின் ட்வீட் செய்ததையடுத்து, கட்டே இடதுசாரி சார்புடையவர் என்று குற்றம்சாட்டி மீம் செய்ததைத் தொடர்ந்து, சமூக ஊடக பயனர்கள் தங்கள் பதிலில் வேறுபட்டனர்.

விஜயா கட்டேவை பணிநீக்கம் செய்ய வேண்டும் வலியுறுத்தி பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்ட அதே நேரத்தில், அவர் மீது தவறான மற்றும் இனவெறி கருத்துக்களை தெரிவித்த பல பயனர்களும் எலான் மஸ்க்கிற்கு எதிராக எழுந்து நின்றனர். முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி, டிக் காஸ்டோலோ செய்த ட்வீட்டில், “நீங்கள் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களை இலக்காகக் கொண்ட நிறுவனத்தில் நிர்வாகியாக இருக்கிறீர்கள். கொடுமைப்படுத்துவது தலைமைத்துவம் அல்ல” என்று அவர் கூறினார்.

வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, ட்விட்டருடன் எலான் மஸ்க் கையெழுத்திட்ட ஒப்பந்தம் நிறுவனம் அல்லது அதன் பிரதிநிதிகளை இழிவுபடுத்துவதில் இருந்து அவரை கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், இந்த விதி ட்வீட்டுகள் அல்லது ஒப்பந்தத்தைப் பற்றி செய்யப்பட்ட அறிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும், எனவே விஜயா கட்டே காடே மீதான அவரது அறிக்கைகள் அதன் வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

மற்றொரு ட்விட்டர் ஆலோசகரான ஜிம் பேக்கரை குறிவைத்து வலதுசாரி ஊடக ஆளுமை மைக் செர்னோவிச் பதிவிட்ட ட்வீட்டிற்கு எலான் மஸ்க் பதிலளித்தார், மோசடிக்கு வழிவகுத்த குற்றச்சாட்டு மிக அப்பட்டமாகத் தெரிகிறது… என்று கூறினார்.

ட்விட்டர் கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படும் என பயந்து, ட்விட்டரை எலான் மஸ்க் வாங்குவது குறித்து ஊழியர்கள் ஏற்கனவே அச்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.