டெல்லி: சீனர்கள் இந்தியாவுக்கு வர சுற்றுலா விசா அளிப்பதற்கு இது உகந்த நேரமில்லை என வெளியறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை 2020ல் இருந்து நிறுத்தி வைத்துள்ளது சீனா என்று வெளியறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.