உக்ரைன் ரஷ்ய போரானது மாதகணக்கில் அல்லது ஆண்டு கணக்கில் கூட இழுக்கலாம் என மேற்கத்திய ராணுவ கூட்டமைபான நோட்டோவின் பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையானது மூன்றாவது மாதத்தில் காலெடுத்து வைத்து இருக்கும் நிலையில், இந்த ராணுவ மோதலானது மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட நீடிக்க வாய்ப்பு இருப்பதாக நோட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை சந்தித்த நோட்டோ பொதுசெயலாளர் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைனுக்கு தேவைப்பட்டால் வருடக்கணக்கில் கூட உதவிகள் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனின் சோவித் கால ஆயுதங்களுக்கு மாற்றாக, நவீன மேற்கத்திய இராணுவ உபகரணங்கள் வரை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் நாங்கள் நீண்ட காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும் ஏன்னென்றால் இந்த போர் நடவடிக்கை வருடகணக்கில் நீள்வதற்க்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளை வரவேற்கிறோம்: நோட்டோ பொதுசெயலாளர் அழைப்பு!
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக இந்த வார தொடக்கத்தில், 40 நாடுகளின் பிரதிநிதிகள் ஜெர்மனியில் கூடி உக்ரைனுக்கு கூடுதலான ஆயுதங்களை வழங்குவது தொடர்பான ஆலோசித்து இருந்தது குறிப்பிடதக்கது.