இனி பிட்காயின் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் சட்டபூர்வ நாணயம்.. !

மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR) பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக அங்கீகரித்துள்ளது. இது பிட்காயினை ஏற்றுக் கொண்ட இரண்டாவது நாடாகும்.

CAR உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். ஆனால் வைரங்கள், தங்கம் மற்றும் யுரேனியம் ஆகியவற்றால் நிறைந்துள்ளது.

இது பல தசாப்தங்களாக மோதல் பிரச்சனைகளால் சிதைக்கப்பட்டு வருகின்றது.

மோதல் பிரச்சனை

குறிப்பாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பல தசாப்தங்களால் மோதலால் சிதைக்கப்பட்டு வருகிறது. இது ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியாகவும் உள்ளது.

ஒரு மனதாக ஏற்றுக் கொள்கிறோம்

ஒரு மனதாக ஏற்றுக் கொள்கிறோம்

இதற்கிடையில் தான் CAR பிரெசிடன்ஸியின் அறிக்கையில், பிட்காயினை ஒருமனதாக அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு உலக நாடுகளுக்கு CAR தைரியமான ஒரு நாடாக மாற்றலாம்.

 முதல் நாடு எது?
 

முதல் நாடு எது?

முன்னதாக எல் சால்வடோர் கடந்த செப்டம்பர் 2021ல் பிட்காயினை உத்தியோகபூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடாக இருந்தது. து. இதுவே சர்வதேச நாணய நிதியம் உள்பட பல வல்லுனர்களால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாடாக மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளது.

கிரிப்டோகரன்சி வரைவு சட்டம்

கிரிப்டோகரன்சி வரைவு சட்டம்

முன்னதாக சில தினங்களுக்ல்கு முன்பு தான் மத்திய ஆப்பிரிக்க குடியரசு கிரிப்டோகரன்சியை ஆளும் வரைவு சட்டத்தின் மீது வாக்களித்து,சட்டபூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் பிட்காயினும் சட்டபூர்வ நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சட்ட கட்டமைப்பு

சட்ட கட்டமைப்பு

CAR இந்த கிரிப்டோ சட்டத்தை நிறைவேற்றியதிற்கு இரண்டு காரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளது. ஒன்று கிரிப்டோகரன்சி மற்றும் இந்த நாணயங்களைக் கையாளும் நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது. அதாவது பரிமாற்றங்கள், கடன் மற்றும் கடன் வாங்கும் தளங்கள் போன்றவை.

 2வது சட்டம் என்ன?

2வது சட்டம் என்ன?

இரண்டாவது மசோதா மூலம், நிதித் துறைக்கு சாதகமான சூழல் உருவாக்கப்படும் என்பதால் இந்தத் துறையில் உள்ள தொழில் மற்றும் அனைத்து பொருளாதார நிறுவனங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யோசிக்க வேண்டிய விஷயம்

யோசிக்க வேண்டிய விஷயம்

எது எப்படியோ வளர்ந்த நாடுகள் கூட இதனை அதிகாரர்ப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொள்ள தயங்கும் நிலையில், மத்திய ஆப்பிரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. அதேசமயம் ரஷ்யாவின் கூட்டாளியாக உள்ளதும் யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

bitcoin becomes official currency in CAR

bitcoin becomes official currency in CAR bitcoin becomes official currency in CAR/இனி பிட்காயின் மத்திய ஆப்பிரிக்காவின் சட்டபூர்வ நாணயம்.. !

Story first published: Thursday, April 28, 2022, 21:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.