சென்னை: பொம்மையை வைத்து விளையாடியபோது பேட்டரியை விழுங்கிய சிறுமி – மருத்துவமனையில் அனுமதி

பொம்மையை வைத்து விளையாடியபோது பட்டன் போன்ற பேட்டரியை விழுங்கிய குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை கவனமாக வளர்ப்பது என்பது தற்போதைய காலத்தில் பெற்றோருக்கு மிகவும் சவாலான ஒரு வேலை என்றே சொல்லலாம். குழந்தைகள் வளரும்வரை எப்போதும் அவர்களை கண் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அப்படி தவறும் பட்சத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அதுபோல ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை அயனாவரம் வடக்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர் ஒருவரின் நான்கரை வயது மகள் அதேப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்றிரவு சிறுமி வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது விளையாட்டு பொம்மையில் இருந்த பட்டன் வடிவிலான பேட்டரி ஒன்றை சிறுமி எடுத்து விழுங்கியிருக்கிறார். இதில் பயந்துபோன சிறுமி அழுகும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பெற்றோர், சிறுமியின் தொண்டையில் பேட்டரி சிக்கிக்கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
image
அங்கு சிறுமிக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் குழந்தையை மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருந்து மூலமாக பேட்டரியை வெளியே கொண்டுவரும் சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துள்ளனர். இதனால் சிறுமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.