உலகத்தை ஆட்டி படைக்கும் திட்டம் ‘சூப்பர் கம்பெனி’: எலான் மஸ்க் மாஸ்டர் பிளான்

புதுடெல்லி: உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க், தனது வர்த்தகத்தை பல்வேறு துறைகளுக்கு விரிவுப்படுத்தி வருகிறார். ஏற்கனவே, டெஸ்லா கார் நிறுவனம், விண்வெளி  நிறுவமான ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றை அவர் நடத்தி வருகிறார். தற்போது, உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனமாக தனது தொழிலை விரிவுப்படுத்த உள்ளார். இதற்காக, ‘சூப்பர் கம்பெனி’ என்ற கொள்கையை உருவாக்கி இருக்கிறார். தனது நிறுவனங்கள் அனைத்தையும் இதன் கீழ் இணைத்து, மிகப்பெரிய வர்த்தக பிரமாண்டத்தை உருவாக்குவதே அவருடைய திட்டம். சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை 3.26 லட்சம் கோடிக்கு வாங்கிய அவர், தற்போது பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலாவையும் வாங்குவதற்கு விலை பேசி வருகிறார். இதைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்களை அவர் வாங்க திட்டமிட்டுள்ளார்.* எக்ஸ் பெயரின் மோகம்சமீப காலமாக ஆங்கில எழுத்தான ‘எக்ஸ்’ மீதான எலன் மஸக்கின் மோகம் அதிகமாகி இருக்கிறது. சமீபத்தில் அவர், ‘எக்ஸ் ஹொல்டிங் -1’, எக்ஸ்-ஹொல்டிங்-11, எக்ஸ்-ஹொல்டிங்-111 என்ற பெயரில் 3 புதிய நிறுவனங்களின் பெயர்களை வரி விலக்கு சலுகை கொண்ட டெலவாரில் பதிவு செய்துள்ளார். புதிதாக வாங்க உள்ள டிவிட்டர், கோகோ கோலா உள்ளிட்ட நிறுவனங்களை இவற்றில் 2வது நிறுவனத்துடன் இணைத்து அவர் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.