கோதுாளி முகூர்த்தத்தில் 183 ஜோடிக்கு திருமணம்| Dinamalar

தட்சிண கன்னடா:சூரியன் அஸ்தமன நேரத்துக்கு முன், கோதுாளி முகூர்த்தத்தில், பெல்தங்கடி தர்மஸ்தலாவில் 183 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
சூரிய உதயம், அஸ்தமன நேரங்கள், ‘கோதுாளி லக்னம்’ எனப்படுகிறது. கோதுாளி என்பது பசுக்கள் நடந்து செல்லும் புழுதி. இவை எங்கும் பரவுவதால், அந்நேரத்தில் அத்தனை தோஷங்களும் நீங்குகிறது.எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் காலை 5:45 முதல் 6:15 மணி வரையிலும், சூரிய அஸ்தமன காலம் மாலை 5:45 முதல் 6:15 மணி வரையிலும் அற்புதமான காலகட்டம். இந்த முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும்.
இதையொட்டி, பெல்தங்கடி தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலில், தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே தலைமையில், 183 மணமக்களுக்கு நேற்று முன்தினம் மாலை திருமணம் நடந்தது. மணமக்களுக்கு அன்று காலையில் வீரேந்திர ஹெக்டே இல்லத்தில் சேலை, ரவிக்கை மற்றும் மணமக்களுக்கு சால்வை மற்றும் வேஷ்டி வழங்கப்பட்டது.

மணமக்கள் அனைவரும், வாழ்நாள் முழுதும் ஒன்றாக வாழ்வதாக உறுதிமொழி எடுத்தனர். பின், மஞ்சுநாத சுவாமியை தரிசனம் செய்து, சொந்த ஊர் சென்றனர்.திருமணத்தில் வருவாய் துறை அமைச்சர் அசோக், நடிகர் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.திருமணத்தை ஒட்டி, தர்மஸ்தலா விழா கோலம் பூண்டிருந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.