‘பாடி’யுடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவு செய்த கொலையாளிகள்: சென்னையில் 4 பேர் கைது!

சென்னை மணலி நியூ டவுனில் புதன்கிழமை இரவு முன் விரோதம் காரணமாக நான்கு பேர்’ ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்றுவிட்டு, கொலை செய்ததை தங்கள் நண்பர்களிடம் நிரூபிப்பதற்காக உடலுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெள்ளிவயல்சாவடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(32). இவருக்கும், நண்பரான பழைய நாப்பாளையத்தைச் சேர்ந்த மதனுக்கும் (31) சில நாட்களுக்கு முன்பு விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமையன்று, மணலி நியூ டவுனில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த மது விருந்துக்கு ரவிச்சந்திரனை மதன் அழைத்தார்.

வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே, ரவிச்சந்திரன் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. இதனால், பதட்டமடைந்த அவரது மனைவி கீர்த்தனா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரைத் தேடி, இறுதியில் வெற்றி நகரில் உள்ள எம்ஆர்எஃப் விளையாட்டு மைதானத்தை அடைந்தனர்.

அங்கு, ஒரு மூலையில் ரவிச்சந்திரன் உடலுடன், மற்ற நான்கு பேரும் செல்ஃபி எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கொலையாளிகள் நான்கு பேரும்’ உடனே இங்கிருந்து செல்லும்படியும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கீர்த்தனா மற்றும் உறவினர்களை மிரட்டி உள்ளனர்.

ஆனால், அதையும் மீறி கீர்த்தனாவும், மற்றவர்களும் ரவிச்சந்திரன் அருகே சென்று பார்த்தபோது அவர் உடல் முழுவதும் காயங்களுடன் அசைவில்லாமல் இருந்தார். மதுபான பாட்டில்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

இதைத் தொடர்ந்து’ ரவிச்சந்திரன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து,  போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர்.

கீர்த்தனாவின் புகாரின் அடிப்படையில், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தனிப்படை அமைத்து கொலையாளிகள் ஏ மதன் குமார்(31), ஏ தனுஷ்(19), கே ஜெயபிரகாஷ்(18), மற்றும் எஸ் பரத் (19), ஆகிய நால்வரையும் இடையஞ்சாவடி அருகே ஒரு இடத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஒரு வாட்ஸ்அப் குழுவில் வெளியான புகைப்பட ஆதாரம் கொலையாளிகளை அடையாளம் காண செல்ஃபி உதவியது என்று விசாரணை அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.