நெடுந்தீவு கடலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் இழப்பீடு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

நெடுந்தீவு கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த கடற்றொழிலாளர் ஒருவரது குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையை அடுத்து, கடந்த வருடம் இடம்பெற்ற, இயற்கை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த மரியவேதநாயகம் அமரலமேயன் என்பவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பீட்டுத் தொகை  கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் இன்று(28.04.2022) மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற குறித்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பாக, கடற்றொழில் அமைச்சரின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சிவகுரு பாலகிஸ்னன் குறித்த இழப்பீட்டுக்கான காசோலையை அனர்த்தத்தில் உயிரிழந்த அமரலமேயனின் தந்தையிடம் வழங்கினார்.

இதன்போது, ஈ.பி.டி.பி. கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக பொறுப்பாளர் முரளி, நெடுந்தீவு பிரதேச கடற்றொழில் திணைக்கள் உத்தியோகத்தர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சர் – 28.04.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.