Tamil news today live: இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது.. முதல்வர் ஸ்டாலின்!

Petrol-Diesel price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Tamil Nadu News Updates: பெட்ரோல்-டீசல் விலை விவகாரத்தில் மாநிலங்கள் மீது குற்றம்சாட்டுவதா என்று பிரதமர் மோடி புகாருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முழு பூசணிக்காயை சோற்றில் மரைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தீ விபத்து தடுப்பு கட்டமைப்புக்கு ரூ.114 கோடி

தமிழக அரசு மருத்துவமனைகளில் தீ விபத்து தடுப்பு கட்டமைப்பு ஏற்படுத்த ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தை வாபஸ் பெற நடவடிக்கை-பிரதமர் அறிவிப்பு

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை வட கிழக்கு மாநிலங்களில் முற்றிலுமாக வாபஸ் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்தார்.

எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

எல்.ஐ.சி.யின் 22 கோடி பங்குகளை விற்று ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசின் தனியார்மயமாக்கலின் ஓர் அங்கம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.

IPL update: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீழ்த்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
12:34 (IST) 29 Apr 2022
இலங்கை தமிழர்களுக்கு உதவுவதே அரசின் நிலைப்பாடு!

இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு; மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; சிலிண்டர்கள் கிடைப்பது இல்லை- மு.க.ஸ்டாலின் !

12:33 (IST) 29 Apr 2022
இலங்கைக்கு 40,000 டன் அரிசி அனுப்பி வைக்க தயார்.. ஸ்டாலின்!

இலங்கை மக்களுக்கு உதவ பிரதமர் மோடியிடம் நேரடியாகவும் கோரிக்கை வைத்துள்ளேன். அனுமதி அளிப்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை இலங்கைக்கு 40,000 டன் அரிசி, உயிர் காக்கும் மருந்துகள், 500 டன் பால் பவுடர் அனுப்பி வைக்க தயார். இந்திய தூதரகம் வழியாக தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

11:58 (IST) 29 Apr 2022
இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி வேண்டும்!

இலங்கை தமிழர்களுக்கு உதவ, தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார். உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க அனுமதி தர கோரி தீர்மானம்.

11:56 (IST) 29 Apr 2022
விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு.. ஓபிஎஸ் கண்டனம்!

திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தார். தங்கமணி உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். தங்கமணி குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.

11:55 (IST) 29 Apr 2022
விசாரணை கைதி மரணம்.. நடவடிக்கை எடுக்கப்படும்.. ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணியின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்று உடன் நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்வர் ஸ்டாலின்!

11:33 (IST) 29 Apr 2022
பெங்களூருவில் செமிகண்டக்டர் மாநாடு!

பெங்களூருவில் செமிகண்டக்டர் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

11:20 (IST) 29 Apr 2022
மதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கம்!

துரை வைகோவிற்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதிமுகவில் இருந்து சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் தற்காலிக நீக்கம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

11:19 (IST) 29 Apr 2022
ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா!

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 182 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10:54 (IST) 29 Apr 2022
இந்தி மொழியை ஏற்க மாட்டோம்-இயக்குநர் ரஞ்சித்

இந்தி மொழியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

10:24 (IST) 29 Apr 2022
டெல்லியில் நிலக்கரி தட்டுப்பாடு

டெல்லியில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.

10:10 (IST) 29 Apr 2022
சிகரெட் வடிவில் சாக்லெட்-2 நிறுவனங்களுக்கு சீல்

மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்த 2 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

09:45 (IST) 29 Apr 2022
சென்னையில் தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹272 அதிகரித்து சவரன் ₹39,072க்கும், ஒரு கிராம் ₹4,884 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

09:25 (IST) 29 Apr 2022
3,377 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,377 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2,496 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், 60 பேர் உயிரிழந்தனர்.

09:01 (IST) 29 Apr 2022
சியூஇடி-க்கும் விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

பொது நுழைவுத் தேர்வு(CUET)க்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மே 6-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

08:40 (IST) 29 Apr 2022
சென்னை, கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை உயர்வு

ஒரே நாளில் ரூ.10 அதிகரித்து கிலோ ரூ.50க்கு விற்பனை வரத்து குறைவு என்பதால் மேலும் தக்காளி விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.