தங்கம் விலை ஏப்ரலில் 1.7% வீழ்ச்சி.. இது வாங்க சரியான வாய்ப்பா.. இன்று குறைந்திருக்கா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்று மீண்டும் சற்று ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே 1900 டாலர்களுக்கு கீழாக குறைந்து வர்த்தகமாகி வந்த நிலையில், இது மீண்டும் 1900 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

தங்கம் விலையானது ஏப்ரல் மாதத்தில் இதுவரையில் கிட்டதட்ட 2 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இதே வெள்ளி விலையும் 5% சரிவினைக் கண்டுள்ளது. இது வாங்க சரியான இடமா? இனியும் குறையுமா?

தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இன்றும் தங்கம் விலை வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இனியும் குறையுமா?

குறைந்த விலையில் தங்கம்

குறைந்த விலையில் தங்கம்

சர்வதேச சந்தையாகட்டும், இந்திய சந்தையாகட்டும் தங்கம் விலையானது நடப்பு மாதத்தில் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், தொடர்ச்சியாக பார்க்கும்போது சரிவினைக் கண்டுள்ளது. இது மீடியம் டெர்மில் குறைந்த விலையானது முதலீட்டாளர்களை வாங்க தூண்டியிருக்கலாம். இது தங்கம் விலைகு ஆதரவாக அமைந்துள்ளது.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

வரவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் நிச்சயம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினை உயர்த்தப்படலாம். இது டாலரின் மதிப்பினை மேலும் ஊக்குவிக்கலாம். இது மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கம் விலையினை விலை உயர்ந்ததாக மாற்றலாம். இதன் காராணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

20 ஆண்டுகளில் வலுவான ஏற்றம்
 

20 ஆண்டுகளில் வலுவான ஏற்றம்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த அமர்வில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. பத்திர சந்தையும் ஏற்றம் கண்டுள்ளது. ஆக இது தங்கம் விலையினை அதிகளவில் ஏற்றம் காணாமல் தடுத்துள்ளது எனலாம். எப்படியிருப்பினும் செப்டம்பர் மாத சரிவுக்கு பிறகு தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கன்டே வருகின்றது.

அமெரிக்காவின் ஜிடிபி

அமெரிக்காவின் ஜிடிபி

அமெரிக்காவிம் ஜிடிபி குறித்தான தரவானது கடந்த அமர்வில் வெளியானது. இது -1.4 சதவீதம் சரிவினைக் கண்டதையடுத்து, தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் சர்வதேச பொருளாதாரம் குறித்த கணிப்பினை குறைத்துள்ளது. அதனை சுட்டிக் காட்டும் விதமாகவே, உலகின் முன்னணி பொருளாதார நாட்டின் வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. ஆக இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

உக்ரைன் பிரச்சனை

உக்ரைன் பிரச்சனை

தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனை இன்னும் பூதாகரமாக கிளம்பியுள்ளது. குறிப்பாக நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ வந்தால், விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என எச்சரித்துள்ளார் அதிபர் புடின். ஆக இது இப்போதைக்கு சுமூக தீர்வை எட்ட வாய்ப்பிலை என்றே கூறலாம். ஆக இதுவும் நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

 கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

சீனாவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக பரவி வரும் நிலையில், அங்கு கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு எப்போது முடிவுக்கு வரும் என்ற நிலையற்ற நிலையே இருந்து வரும் நிலையில், இதுவும் நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

தங்கம் விலையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், டெக்னிக்கலாக அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது பணவீக்கம், சர்வதேச பொருளாதாரம், உக்ரைன் பிரச்சனை என்பது இன்று வரையில் ரிஸ்கான ஒரு பாதையிலேயே உள்ளது. இதற்கிடையில் டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 16.44 டாலர்கள் அதிகரித்து, 1907.36 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது தற்போதைக்கு அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை கிட்டதட்ட 1% அதிகரித்துள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.03% அதிகரித்து, 23.419 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 358 ரூபாய் அதிகரித்து, 51,620 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே கேப் அப் ஆகி தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 536 அதிகரித்து, 64,453 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே கேப் அப் ஆகி தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது இந்திய சந்தையில் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்து, 4884 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 272 ரூபாய் அதிகரித்து, 39,072 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 5328 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 42,624 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 380 ரூபாய் அதிகரித்து, 53,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 0.20 பைசா குறைந்து, 68.80 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 688 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 68,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இது வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டம், சீனாவின் கொரோனா தாக்கம், பணவீக்கம், டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 29th, 2022: gold down 1.7% in April: is it a right time buy?

gold price on April 27th, 2022: gold prices today fall amid high volatility; is it a right time buy? / தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?

Story first published: Friday, April 29, 2022, 12:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.