விரும்பியதை அருளும் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

15-5-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று (விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி சுவாதி நட்சத்திரம்) காலை 10 முதல் 11.30 மணி வரையிலான நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நடத்த உள்ளோம். இந்த ஹோமத்தை சத்ய யுக சிருஷ்டி கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம்.

சத்ய யுக சிருஷ்டி கோயில்

குடும்ப நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் நடத்தப்படுபவை ஹோமங்கள். இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகளால் உருவாக்கப்பட்டு, சிறப்புடன் நடத்தப்பட்டு, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சங்க காலத்திலும் தமிழகத்தில் பல வேள்விகள் இயற்றப்பட்டதை இலக்கியங்கள் கூறும்.

‘கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே!’ வேள்வித் தீயை விரும்புபவன் என ஈசனைப் போற்றும் புறநானூறு. சோழன் பெருநற்கிள்ளியின் ராஜசூய யாகம் பற்றியும் பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தது பற்றியும் அறிவிக்கின்றன இலக்கியங்கள். பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் பல யாகங்களைச் செய்ததால் ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்றே போற்றப்பட்டான். இப்படி சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பலரும் யாகங்களைச் செய்தது குறித்து பல சான்றுகள் உள்ளன.

ஹோமங்களால் குறிப்பிட்ட தேவதைகள் மகிழ்ந்து வேண்டுபவரின் விருப்பங்களை நிறைவேற்றும் என்பது வேத காலம் தொட்டு நிலவி வரும் நம்பிக்கை. 400-க்கும் மேற்பட்ட யாக வகைகளில் தற்போது 60 வகையான யாகங்கள் பிரபலமாக உள்ளன. இதில் ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் மிக மிக சிறப்பானது. திருமகள் செல்வவளம் மட்டுமே அளிப்பவள் இல்லை. வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் அளிப்பவளும் அவளே. மகாலட்சுமியின் அருளைப்பெற இந்த மஹாலட்சுமி ஹோமம் மிக மிக சிறந்தது என்பார்கள் பெரியோர்கள்.

சத்ய யுக சிருஷ்டி கோயில்

தனம் சேர, தான்யங்கள் செழிக்க, தானம் நிலைபெற, தரித்திரம் ஒழிய, தருமங்கள் சிறக்க திருமகளின் திருவருள் தேவை என்பர். இந்த திருமகள் வேறெங்கும் இல்லாத வகையில் முப்பெருந்தேவியரின் அம்சமாய் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமியாக வீற்றிருக்கும் திருத்தலம் ஒன்று மதுரையில் உள்ளது.

மதுரை திருமங்கலத்தில், மதுரை – விருதுநகர் ரோடு, ராயபாளையம் செல்லும் வழியில் உள்ளது சத்ய யுக சிருஷ்டி கோயில். இது பூரணமான ஆன்மிக கோயில் என்று போற்றப்படுகிறது. முக்தி நிலையம் எனப்படும் இங்கு எல்லா தெய்வங்களின் சந்நிதிகளும் உள்ளன. 108 சந்நிதிகளில் 300க்கும் ஏற்பட்ட தெய்வங்களின் மூர்த்தங்கள் உள்ளன. 12 ஜோதிர்லிங்கங்கள், அஷ்ட வசுக்கள், 16 கணபதி, அறுபடை முருகன், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், ரிஷிகள், குண்டலினி சக்திகள், அஷ்ட லட்சுமியர், தச அவதாரங்கள் என இங்கில்லாத தெய்வ வடிவங்களே இல்லை எனலாம்.

தெய்வ சந்நிதிகள் மட்டுமின்றி தியான கூடங்கள், நவராஜ மண்டலம் எனும் அபூர்வ ஆற்றல் மையம் என இந்த ஆலயமே பரந்து விரிந்து ஆன்மிக சேவை மையமாக, முக்தி பெறும் ஆற்றல் மையமாக செயல்பட்டு வருகின்றது. இந்த அற்புத பீடத்தில்தான் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி எனும் மகாதேவி வீற்றிருக்கிறாள். இவளை பௌர்ணமியில் வழிபட்டால் சகல வளங்களையும் தருவாள் என்கின்றன சாஸ்திரங்கள். 18 கரங்களுடன் வீற்றிருக்கும் இந்த திருமகள் 16 வகை செல்வங்களையும், அபயமும் ஆற்றலும் தரக்கூடியவளாக எழுந்தருளி இருக்கிறாள்.

ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி

அபூர்வ வகை கோலத்தில் வீற்றிருக்கும் இந்த திருமகளை வரும் 15-5-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று (விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி சுவாதி நட்சத்திரம்) காலை 10 முதல் 11.30 மணி வரையிலான நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நடத்த உள்ளோம். இந்த ஹோமத்தை சத்ய யுக சிருஷ்டி கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். அன்பர்கள் யாவரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். கடன் பிரச்னை, காரிய ஸித்தி வேண்டும் அன்பர்களுக்கு இந்த ஹோமம் ஒரு நல்வாய்ப்பு எனலாம். இந்த ஸ்ரீமகாலட்சுமி ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் நித்ய சௌபாக்கிய, ருண நிவாரண வாழ்வை அடைவர் என்பது நிச்சயம்.

அபூர்வமான சமித்துக்கள், மலர்கள், மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தால் உங்கள் வீட்டில் சந்தோஷம், மன நிம்மதி பெருகும். சுற்றத்தார் நம்பிக்கை கூடும். கடன் தொல்லை நீங்கும். வியாபார-தொழில் அபிவிருத்தி உண்டாகும். அனைத்திலும் வெற்றி வசமாகும். தீராத நோய்கள் தீரும். தனம், தான்யம், காரிய ஸித்தி, மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள், இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.