`திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது முக்கியம்'- பா.ரஞ்சித் பேட்டி

மதுரையில் வானம் கலைத் திருவிழா துவக்கவிழா இன்று நடந்தது. மதுரையில் உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் தலித் இலக்கிய எழுத்தாளர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் மேடையிலேயே கண்கலங்கினார். நிகழ்வின்போது, இந்தி மொழிப்பிரச்னை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் அவர். இந்தி மொழி குறித்து கன்னட நடிகர் சிக்கா சுதீப் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இடையே டிவிட்டரில் கருத்து மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில் பா.ரஞ்சித்தின் கருத்தும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
நிகழ்வில் செய்தியாளர்களிடையே பேசிய பா.ரஞ்சித், “இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென் இந்தியர்களை விட, வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அப்படி நினைப்பது தவறு. இந்தியை திணிப்பாக எப்போதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது இப்போது முக்கியம்” என்றார்.
image
இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். போலவே `இளையராஜா கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய நபர்களின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதை எதிர்க்கிறோம்’ என்றும் பா.ரஞ்சித் கூறினார். தலித் இலக்கிய கூடுகை என்ற நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தலித் இலக்கியங்களும், தன்னை செதுக்கிய ஆசான்களும் இல்லையென்றால், தான் இல்லை எனக் கூறி கண்கலங்கினார்.
சமீபத்திய செய்தி: மிரட்டல் `மெகாஸ்டார் – மெகா பவர்ஸ்டார்’ காம்போ! வெளியானது சிரஞ்சீவி – ராம்சரணின் ஆச்சார்யாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.