“உங்களால் இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!" – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்து கூறிய கருத்து தேசிய அளவில் அரசியலில் பெரும் விவாதத்துக்கு வித்திட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப், அஜய் தேவ்கன் இருவருக்குமிடையில் அண்மையில் ட்விட்டரில் இந்தி மொழி குறித்து உரையாடல் நடைபெற்றது. இதில் அஜய் தேவ்கன் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று கூறினார்.

தேசிய மொழி சர்ச்சை – சுதீப், அஜய் தேவ்கன்

இதற்கு கிச்சா சுதீப் இந்தி மற்ற மொழிகளைப் போல இந்தியாவின் ஒரு மொழிதான் இந்தி எனக் கூறினார். இவர்களின் இந்த கருத்துப் பகிர்வு இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்க ஆரம்பித்து விட்டனர்.

உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத்

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், “இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். நீங்கள் இந்தியை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடையவர் என்று கருதப்படுவீர்கள். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று விடுங்கள். நாங்கள் பிராந்திய மொழிகளையும் மதிக்கிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியா என்பது ‘இந்துஸ்தான்’. இது இந்தி பேசுபவர்களுக்கான இடம். இந்துஸ்தான் இந்தி பேசாதவர்களுக்கு ஏற்ற இடமல்ல. அவர்கள் இந்த நாட்டை விட்டு வேறு எங்காவது செல்லலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.